» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருச்சி சிவாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்: ஐஎன்டியூசி நிர்வாகி அறிவிப்பு!
வியாழன் 17, ஜூலை 2025 9:11:44 PM (IST)
காமராஜர் குறித்து பேசிய திருச்சி சிவாவை கண்டித்து தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஐஎன்டியூசி மாநில பொது குழு உறுப்பினர் பெருமாள் சாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறத்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை, "பொத்தாம் பொதுவாக ஒரு அறிக்கையை விட்டுவிட்டு கடந்து செல்ல கூடிய நிகழ்வு அல்ல இது. பெருந்தலைவர் இந்த நாட்டிற்காக எவ்வளவு தியாகங்கள் செய்திருக்கிறார்கள் என்பதை நாடும் அறியும் மக்களும் அறிவார்கள். பெருந்தலைவர் ஜாதி மதம் அப்பாற்பட்ட ஒரு மாபெரும் கடவுள். காலங்கள் பல சென்றாலும் இவர் எக்காலத்திலும் போற்றக்கூடியவர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உண்மையான பெருந்தலைவர் ஐயா காமராஜர் அவர்களின் பக்தர்கள் திருச்சி சிவா பேச்சுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் ஆகையால். திருச்சி சிவா இதைப் பற்றி விளக்கம் அளித்தது மற்றும் முதலமைச்சர் பூசி மொழுகியது எங்களுக்கு உடன்பாடில்லை. ஆகையால் தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக கூடிய விரைவில் திருச்சி சிவா பேசிய பேச்சிற்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
பொதுவெளியில் திருச்சி சிவா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி கேட்கவில்லை என்று சொன்னால் நிச்சயமாக தூத்துக்குடிக்கு மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் திருச்சி சிவா எதிர்த்து நடைபெறும். தூத்துக்குடியில் உள்ள தேசியத் தோழர்கள் பெருந்தலைவர் காமராஜரின் உண்மையான தொண்டர்கள் இதில் கலந்துகொண்டு அவர்களின் எதிர்ப்பை பதிவு செய்வார்கள். ஆட்சி முக்கியமா ஆட்சியாளர்கள் முக்கியமா கட்சி முக்கியமா தன்மானம் முக்கியமா. நம் பெருந்தலைவரை சீண்டியவர்கள் யாராக இருந்தாலும் ஒரு கை பார்த்து விடலாம். இப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
முரளிதரன்Jul 18, 2025 - 12:45:34 AM | Posted IP 104.2*****
பெருமாள்சாமி அவர்களை முதலில் காமராஜர் சிலைக்கு அவர் பிறந்தநாளில் ஏன் மாலை அணிவிக்கவில்லை என விளக்கம் கொடுக்க சொல்லுங்கள்.
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை: தனியார் பள்ளி பஸ்கள் தீவைத்து எரிப்பு!
வெள்ளி 18, ஜூலை 2025 5:48:22 PM (IST)

அரசுப் பேருந்தில் ஏசி வேலை செய்யவில்லை என வழக்கு; அதிகாரிகள் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு!
வெள்ளி 18, ஜூலை 2025 5:11:40 PM (IST)

நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது!
வெள்ளி 18, ஜூலை 2025 4:26:47 PM (IST)

சட்டப்பணி ஆணைக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் : நீதிபதி பங்கேற்பு
வெள்ளி 18, ஜூலை 2025 11:36:25 AM (IST)

திருச்சி சிவா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் : தெக்ஷண மாற நாடார் சங்கம்
வியாழன் 17, ஜூலை 2025 4:51:08 PM (IST)

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது: சபாநாயகர் பேட்டி
வியாழன் 17, ஜூலை 2025 3:41:27 PM (IST)

ஓJul 18, 2025 - 02:13:02 PM | Posted IP 104.2*****