» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடியில் ஹோட்டல் கழிவு நீர் சாலையில் தேங்கி சுகாதர கேடு: மாணவிகள், பொதுமக்கள் அவதி!

வெள்ளி 18, ஜூலை 2025 10:34:30 AM (IST)



தூத்துக்குடியில் தனியார் ஹோட்டலில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் சாலையில் தேங்கி நிற்பதால், பொதுமக்கள், பள்ளி மாணவிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். 

தூத்துக்குடி விஇ ரோடு, ஸ்மார்ட் சிட்டி சாலையில் சுப்பையா வித்யாலயம் பெண்கள் பள்ளியின் வடக்கு வாசல் அமைந்துள்ளது. இந்த வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான மாணவிகள் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். மேலும் ஆட்டோ, சைக்கிளில் ஏராளமானோர் வருகின்றனர். கடந்த சில மாதங்களாக பள்ளியின் எதிரே உள்ள தனியார் ஹோட்டலில் இருந்து கழிவு நீர் வெளியேற்றப்படுகிறது. 

இதனால் அந்த பகுதியில் கழிவு நீர் தேங்கி நிற்பதால் சுகாதார கேட்டை ஏற்படுத்தி வருகிறது. மேலும் வாகனங்கள் வேகமாக வரும்போது ஒதுங்க இடமில்லாமல் பள்ளி குழந்தைகள் மீது கழிவு நீர் தெறித்து உடைகள் நாசமாகின்றன. இதனால் பாதசாரிகள், வாகன ஓட்டிகளும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே,  மாநகராட்சி அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து

BvdsgJul 19, 2025 - 09:12:54 AM | Posted IP 172.7*****

ஏன் கனி ஹோட்டல் தான்னு பதிவிட வேண்டியதுதானே.

ஏரியா காரன்Jul 18, 2025 - 02:08:52 PM | Posted IP 172.7*****

அரை குறை மாநகராட்சி எல்லாம் அப்படிதாம்பா. பாதாள சாக்கடை எல்லாம் சும்மா, சேதமடைந்த சிமெண்ட் சாலைகளை கவனிக்காத அரை குறை துட்டு பிடுங்கி மாநகராட்சி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory