» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லை பல்கலை. மாணவர்களிடையே மோதல்: காலவரையற்ற விடுமுறை அறிவிப்பு!
வெள்ளி 29, ஆகஸ்ட் 2025 3:27:16 PM (IST)
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மோதல் காரணமாக காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை அபிஷேகப்பட்டியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வளாகத்தில். மோட்டார் சைக்கிள்களில் வரும் மாணவர்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்காக பல்கலைக்கழகம் நுழைவாயில் அருகில் அனைத்து வாகனங்களுக்கும் பார்க்கிங் வசதி அமைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், இங்கு வரலாற்று துறையில் முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவரான தச்சநல்லூர் அடுத்த மணி மூர்த்தீஸ்வரம் வாழவந்த அம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்துப்பாண்டி மகன் லட்சுமி நாராயணன் (18) நேற்று தனது மோட்டார் சைக்கிளை வாகன நிறுத்தத்தில் நிறுத்தாமல் கேண்டீன் அருகில் ஓட்டி சென்றுள்ளார்.
இதைப் பார்த்த வரலாற்றுத்துறை இரண்டாம் ஆண்டு மாணவர் அருள் முத்துசெல்வன், நீ எப்படி மோட்டார் சைக்கிளை இங்கு கொண்டு வந்தாய் என கேட்டுள்ளார். இதில் வாக்குவாதம் ஏற்படவே, லட்சுமி நாராயணனுக்கு ஆதரவாக வரலாற்று துறையில் படிக்கும் ஆகாஷ் வந்துள்ளார்.
வாக்குவாதம் முற்றிடவே லட்சுமி நாராயணன், அருள் முத்து செல்வன் இடையே மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து அவர்கள் 2 கோஷ்டிகளாக பிரிந்து இரு தரப்பினரும் மோதிக்கொண்டனர். இதில் லட்சுமி நாராயணன், அருள் முத்துசெல்வன் ஆகியோர் காயம் அடைந்த நிலையில் இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கோஷ்டி மோதலில் ஈடுபட்டதாக 3 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். இதனால் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் காரணமாக மறு உத்தரவு வரும் வரை பல்கலைக்கழகத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை அளித்து பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனால் பல்கலைக்கழகம் மூடப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

செங்கோட்டை, நாகர்கோவில் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு
வெள்ளி 29, ஆகஸ்ட் 2025 11:53:18 AM (IST)

திருநெல்வேலியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் : ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
வியாழன் 28, ஆகஸ்ட் 2025 5:32:36 PM (IST)

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பயில கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
புதன் 27, ஆகஸ்ட் 2025 10:07:51 AM (IST)

சிறுமியை பலாத்காரம் செய்த ஆட்டுத்தரகருக்கு 25 ஆண்டு சிறை : நெல்லை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
புதன் 27, ஆகஸ்ட் 2025 8:24:57 AM (IST)

நெல்லை கவின் ஆணவக் கொலை: சுர்ஜித் உள்பட மூவருக்கு 15 நாள்கள் காவல் நீட்டிப்பு!
செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 5:40:42 PM (IST)

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினால் 47,392 மாணவர்கள் பயன்: சபாநாயகர் தகவல்
செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 12:37:45 PM (IST)
