» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பிளாஸ்டிக் குடோன் தீவிபத்தில் 10 லட்சம் சேதம்: புகைமூட்டத்தால் பொதுமக்கள் கடும் அவதி!!

வியாழன் 18, செப்டம்பர் 2025 11:36:24 AM (IST)

சிவசைலம் அருகே பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீவிபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமானதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். 

தென்காசி மாவட்டம் சிவசைலம் அருகே ஒரு பழைய பிளாஸ்டிக் குடோன் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த குடோனில் நள்ளிரவு ஒரு மணியளவில் தீ ஏற்பட்டது. குடோன் என்பதால் சில நிமிடங்களிலேயே தீ மளமளவென பரவத்தொடங்கியது. இந்த விபத்து காரணமாக சுற்றி உள்ள பகுதியில் கரும் புகை சூழ்ந்தன.

இதனையடுத்து தீ விபத்து குறித்து தீயணைப்புத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு மளமளவென எரியும் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீயணைப்புத்துறையினர் சுமார் 10 மணி நேரமாக போராடி வருகின்றனர். தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மண்டலமானதால் அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory