» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசி மாவட்டத்திற்கு அக்.29,30 தேதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம்!

வியாழன் 23, அக்டோபர் 2025 3:28:48 PM (IST)

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 28ஆம் தேதி தூத்துக்குடி வந்து, சாலை மார்க்கமாக தென்காசி மாவட்டத்திற்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

முதல்வர் மு.க.ஸ்டாலின் அக்டோபர் 24 மற்றும் 25ஆம் தேதிகளில் தென்காசி மாவட்டத்திற்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மழையின் காரணமாக பயணம் தள்ளி வைக்கப்பட்டது. 

இந்நிலையில் வரும் 28ஆம் தேதி தூத்துக்குடிக்கு சென்றுவிட்டு பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக தென்காசி மாவட்டத்திற்கு முதல்-அமைச்சர் செல்ல உள்ளார்.

29ஆம் தேதி தென்காசி மாவட்டத்தில் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு அங்கிருந்து சாலை மார்க்கமாக மதுரை சென்று அன்றிரவு அங்கேயே தங்கும் முதல்-அமைச்சர், அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன் தேவர் குருபூஜையை முன்னிட்டு காலை மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்.

தொடர்ந்து மதுரையில் இருந்து மீண்டும் சாலை மார்க்கமாக ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் சென்று அங்குள்ள தேவர் ஆலையத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு பின்னர் சென்னை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory