» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மதுரை ரயில்வே கோட்டத்தை சென்னை தேர்வு வாரியத்துடன் இணைக்க வேண்டும்: முதல்வரிடம் கோரிக்கை!
வெள்ளி 31, அக்டோபர் 2025 8:37:06 AM (IST)
மதுரை ரயில்வே கோட்டத்தை, சென்னை தேர்வு வாரியத்துடன் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
தென்காசி மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் பாண்டியராஜா நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறிஇருப்பதாவது:-
தெற்கு ரயில்வேயின் கீழ் சென்னை, திருச்சி, சேலம், மதுரை என தமிழகத்தில் 4 கோட்டங்கள், திருவனந்தபுரம், பாலக்காடு என கேரளாவில் 2 கோட்டங்கள் உள்ளன.
அதில் சென்னை, திருச்சி, சேலம் கோட்டங்களில் சென்னை தேர்வு வாரியம் மூலமாகவும், மதுரை, திருவனந்தபுரம், பாலக்காடு கோட்டங்களில் திருவனந்தபுரம் தேர்வு வாரியம் மூலமாகவும் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
இதனால் மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட தென் தமிழக மாவட்டங்களான மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் உள்ள காலிப் பணியிடங்களில் தமிழர்களை பணியமர்த்தும் வாய்ப்பு பாதிக்கிறது.
நடைமுறை சிக்கல்களால் தமிழகத்தில் உள்ளவர்கள் சென்னை, திருச்சி, சேலம் கோட்டங்களில் உள்ள காலி பணியிடங்களுக்கு மட்டுமே விண்ணப்பிக்கும் நிலை தற்போது உள்ளது.
எனவே பழைய நடைமுறைப்படி மதுரை ரயில்வே கோட்டத்தை சென்னை ரயில்வே தேர்வு வாரியத்துடன் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தென்காசி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள காசி விசுவநாதர் கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் வந்து செல்கின்றனர்.
இங்கு வருகிற பக்தர்களின் கார்களை 4 ரத வீதிகளிலும் நிறுத்துவதற்கு இடம் இல்லை. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் காசி விசுவநாதர் கோவிலுக்கு எதிரே அமைந்துள்ள காலி இடத்தில் பன்னடுக்கு வாகன காப்பகம் அமைத்து கொடுத்தால் நூற்றுக்கணக்கான கார்களை நிறுத்த வசதியாக இருக்கும். இவ்வாறு அதில் கூறிஉள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வெள்ள பாதிப்புகளைத் தடுக்கப் போர்க்கால நடவடிக்கை : ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்சியர் உத்தரவு!
சனி 16, மே 2026 11:07:43 AM (IST)

சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக இபிஎஸ் ஆதரவாளர்கள் நூதன போராட்டம்!
வெள்ளி 15, மே 2026 11:27:59 AM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டு 50 பேர் குண்டர் சட்டத்தில் கைது!
புதன் 13, மே 2026 4:16:28 PM (IST)

நெல்லையில் வீடு புகுந்து இளம்பெண் பலாத்காரம் - கொத்தனார் கைது!
செவ்வாய் 12, மே 2026 8:42:37 AM (IST)

விஜய் முதல்வராவதில் இழுபறி நீடிப்பால் விரக்தி: தவெக நிர்வாகி தீக்குளித்து தற்கொலை முயற்சி
சனி 9, மே 2026 3:10:10 PM (IST)

கோடை மழையால் குற்றாலம் ஐந்தருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்!
சனி 9, மே 2026 9:00:15 AM (IST)


