» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மாநில வில் வித்தை போட்டி: வீரவநல்லூர் மாணவனுக்கு தங்கப்பதக்கம் வென்று அசத்தல்

ஞாயிறு 16, நவம்பர் 2025 11:09:21 AM (IST)



மாநில அளவிலான வில் வித்தை போட்டியில் வீரவநல்லூர் பாரதியார் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார். 

மாநில அளவிலான வில்வித்தை போட்டிகள் சென்னை திருவேற்காடு அர்ஜூனா ஆர்ச்சரி அகதெமியில் அண்மையில் நடைபெற்றது. இப்போட்டியில் மாநில முழுவதும் பல்வேறு பள்ளிகளில் இருந்து 350 மாணவர், மாணவிகள் கலந்துகொண்டனர். இதில், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு பள்ளி மாணவர்கள் மாநில அளவில் புள்ளி பட்டியலில் மூன்றாம் இடம் பெற்றனர். இரு தரவரிசைப் போட்டியில் திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் பாரதியார் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் ஊ. லெபின் சுதர்ஷன், ஒரு போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்றுத் தங்கப்பதக்கமும், அடுத்தப் போட்டியில் வெள்ளிப்பதக்கமும் வென்றார். 

மாணவருக்கு பள்ளியின் தலைமையாசிரியர் டேனியல் கிப்சன், பொறுப்பாசிரியர் இராஜேஷ்வரி, ஆசிரியர் தியாகராஜன், ஆசிரியர்கள், அலுவலர்கள், மாவட்ட வில் வித்தை அமைப்பின் தலைவர் எஸ். ஆறுமுகம், துணைத் தலைவர்கள் டி. சேகர், எஸ்.பி. ஜெகமோகன், மாவட்டச் செயலர் கே. பூல்பாண்டி, பொருளாளர் ஏ. இளையராஜா, நிர்வாகிகள் பாராட்டுத் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory