» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

எஸ்ஐஆர் படிவங்களை நிரப்ப திமுக இளைஞர் அணி உதவ வேண்டும் : அமைச்சர் கீதாஜீவன் பேச்சு!

திங்கள் 17, நவம்பர் 2025 11:06:00 AM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில், எஸ்ஐஆர் படிவங்களை நிரப்பும் பணியில் பொதுமக்களுக்கு இளைஞர் அணி உதவிட வேண்டும் என்று அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி ஆலோசனை கூட்டம் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், தலைமையில் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் பிரதீப், பாரதி, ராதாகிருஷ்ணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தர் வரவேற்புரையாற்றினார். 

வடக்கு மாவட்ட செயலாளரும் சமூநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் மாநில இளைஞர்அணி செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதிஸ்டாலின் பிறந்தநாளை எழுச்சி நாளாக அனைவரும் கொண்டாடவேண்டும். குறிப்பாக இளைஞர் அணியினர் கடமை உணர்வோடு பணியாற்ற வேண்டும் தற்போது நான்காம் தேதியிலிருந்து அடுத்த மாதம் 4ம் தேதிவரை தீவிர வாக்குதிருத்தம் எஸ்ஐஆர் பணி நடைபெறுகிறது. 

இதில் அந்த பகுதியில் உள்ள இளைஞர் அணியினை சேர்ந்தவர்கள் பூத்வாரியாக படிவம் நிரப்பப்பட்டு பொதுமக்களுக்கு உதவிட வேண்டும் அதன்மூலம் நம்முடைய வாக்கு பறிப்புபறிபோகாது. ஒன்றிய பிஜேபி அரசும் தேர்தல்ஆணையமும் இணைந்து தமிழ்நாட்டில் குளப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள் அது ஓருபோதும் நடக்காது அதற்கு நாம் இடமளிக்க கூடாது. 

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி மட்டுமின்றி பகுதி வாரியாக துணை முதலமைச்சர் பிறந்த நாளை மக்கள் பயன்பெறும் வகையில் செய்ய வேண்டும். அந்தந்த பகுதிகளில் மக்களுக்கான பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் தூத்துக்குடி தொகுதியில் 120 அணிகள் கலந்து கொண்ட கிரிக்கெட்போட்டி நடைபெறுகிறது. 

கோவில்பட்டி ஹாக்கி போட்டியும் விளாத்திகுளம் பகுதியில் கபடிபோட்டியும் நடத்துவது மட்டுமின்றி எல்லா பகுதிகளிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கிட வேண்டும் வரும் தேர்தல் முக்கியமானதாகும். முதலமைச்சர் தளபதியார் கூறியபடி 200 தொகுதியை நாம் வென்றெடுத்தாகவேண்டும். சென்னையில் நடைபெற்ற 75வது அறிவுத்திருவிழா இளைஞர்அணி சார்பில் நடைபெற்றது. அதில் வடக்கு மாவட்டத்திலிருந்து கலந்து கொண்ட அனைவரையும் பாராட்டுகிறேன் என்று பேசினார். 

கூட்டத்தில் வடக்கு மாவட்டம் முழுவதும் இளைஞர் அணி சார்பில் 27ம் தேதி நலத்திட்ட உதவிகள் வழங்குவது வரும் தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழக முதலமைச்சர்முத்துவேல்கருணாநிதி ஸ்டாலினை 2ம்முறையாக முதலமைச்சராக்குவது உள்பட 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

கூட்டத்தில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் செல்வின் ரவி சங்கரநாராயணன் பிரவீன்குமார் பகுதி இளைஞர் அணி அமைப்பாளர்கள் சூர்யா நிர்மல்குமார் ராஜா பெரியசாமி செந்தூர்பாண்டி ராமசந்திரன் துணை அமைப்பாளர் சிவசுந்தர் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் வட்டப்பிரதிநிதி பாஸ்கர் மற்றும் மணி அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஜோசப் அமல்ராஜ் நன்றியுரையாற்றினார்.


மக்கள் கருத்து

சண்முகம்Nov 17, 2025 - 04:48:34 PM | Posted IP 162.1*****

கடந்த சில வருடங்களாக வாக்காளர் பட்டியலில் உருவப்படம் இன்றி முகவரி இன்றி பிழையான முகவரியில் வாக்காளர் பட்டியலை வெளியிட்டு அதாவது சான்றாக வ உசி மெயின் தெரு என்பது வ உசி குறுக்கு தெரு என மாற்றி வெளியிட்டு வாக்காளர் விபர சரிபார்ப்பு BLO பிழையான முகவரி விசாரணையில் நீக்கப்பட்டுள்ளது இதில் குற்றம் WRONG ADDRESS PUBLISHED UNQUALIFIED BLO TRAINER ஏற்பாடு செய்த தேர்தல் ஆணையத்தின் மீது உள்ளது.அதற்கு வாக்காளர் எப்படி பொறுப்பு ஆவார்கள்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory