» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆர்வலர் தகவல்!

வியாழன் 4, டிசம்பர் 2025 3:31:53 PM (IST)

நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் இன்று இரவு தொடங்கி  நாளை அதிகாலை வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தென்காசி வெதர்மேன் ராஜா தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து தென்காசி வெதர்மேன் ராஜா சமூக வலைளத்தில் வெளியிட்ட பதிவில்: ஈரப்பதம் மிக்க கிழக்கு திசை காற்று காரணமாக இன்று தென் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு மிக சாதகமாக உள்ளது. இராமநாதபுரம் தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று இரவு மற்றும் நாளை அதிகாலை நேரங்களில் கனமழை பெய்யும். 

குறிப்பாக இராமநாதபுரம், இராமேஸ்வரம், தங்கச்சிமடம் பாம்பன் தனுஷ்கோடி மண்டபம் வைப்பார், தூத்துக்குடி, காயல்பட்டினம், திருச்செந்தூர் ஆகிய கடலோர பகுதிகளில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்புள்ளது.

நெல்லை தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை இன்று மாலை இரவு நேரங்களில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம். அம்பாசமுத்திரம் விகேபுதூர் ஆலங்குளம் தென்காசி செங்கோட்டை கடையநல்லூர் ஆகிய தாலுகாவில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு என்று தெரிவித்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory