» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
காமராஜரை இழிவுபடுத்திய யூடியூபரை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்
வெள்ளி 5, டிசம்பர் 2025 8:57:36 PM (IST)

பெருந்தலைவர் காமராஜ் குறித்து அவதூறாக பேசியதாக யூடிபா் முக்தாா் அகமது என்பவரை கண்டித்து தூத்துக்குடியில் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெருந்தலைவர் காமராஜரை இழிவு படுத்தி பேசிய மை இந்தியா டியூப்சேனல் நடத்தி வரும் முக்தார் அகமது என்பவரை கண்டித்து தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் சிஎஸ் முரளிதரன் தலைமையில் காங்கிரஸ் சார்பில் விவிடி சிக்னல் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத்தலைவர் ஏ பி சி விசண்முகம் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல தலைவர்கள் ராஜன், செந்தூர் பாண்டி, சேகர்,ஐசன் சில்வா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின முக்தார் மீது வன்முறையை தூண்டும் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்க மாநில செயலாளர் ராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் சந்திரபோஸ், எஸ் பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் பிரபாகரன், மாநகர் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மரிய ஆல்வின், சிறுபான்மை பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் மைதீன், ஊடகப்பிரிவு மாநில செயலாளர் முத்து மணி, அமைப்புசாரா மாநகர் மாவட்ட தலைவர் நிர்மல் கிறிஸ்டோபர், கலை இலக்கியப் பிரிவு மாவட்ட தலைவர் செல்வராஜ், வடக்கு மண்டல இளைஞர் காங்கிரஸ் தலைவி கமலாதேவி, முன்னாள் மகிலா காங்கிரஸ் மாவட்ட தலைவி முத்து விஜயா, மாவட்ட செயலாளர் கோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேர்தல் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றிட வேண்டும்: மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுறுத்தல்
சனி 7, மார்ச் 2026 3:44:13 PM (IST)

திருநெல்வேலி- மங்களுர் புதிய வாராந்திர ரயில் அறிவிப்பு: கன்னியாகுமரி பயணிகள் ஏமாற்றம்!
சனி 7, மார்ச் 2026 11:34:43 AM (IST)

நாங்குநேரி இரட்டை கொலை: உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கக் கோரி முறையீடு
வெள்ளி 6, மார்ச் 2026 5:32:10 PM (IST)

கபாடபுரமும், தென்மதுரையும் இங்கே! குமரிக்கண்டம் எங்கே? பெ.இராஜேஷ் செல்வரதி நூல் வெளியீட்டு விழா
வெள்ளி 6, மார்ச் 2026 8:03:06 AM (IST)

அமேசான் வலை சேவைகள் மறுதொடக்கம் செயற்கை நுண்ணறிவு பயிற்சி: இளைஞர்களுக்கு அழைப்பு!
வியாழன் 5, மார்ச் 2026 5:23:01 PM (IST)

தேர்தலை அமைதியாக நடத்த நடவடிக்கை: நெல்லை மாநகரக் காவல் ஆணையர் சேகர் தேஷ்முக் உறுதி
வியாழன் 5, மார்ச் 2026 4:54:29 PM (IST)


ஆமாDec 6, 2025 - 12:06:17 PM | Posted IP 162.1*****