» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?- நயினார் நாகேந்திரன் கருத்துக்கு கனிமொழி கேள்வி

சனி 6, டிசம்பர் 2025 5:17:24 PM (IST)

தமிழ்நாடு அயோத்தி போல மாறுவதில் தவறில்லை என பேசிய நயினார் நாகேந்திரன் கருத்துக்கு கனிமொழி எம்பி பதிலடி கொடுத்துள்ளார். 

பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், "திருப்பரங்குன்றம் அயோத்தியாக மாறுவதில் தவறில்லை. அயோத்தி இந்தியாவில் தானே இருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி ராமனின் ஆட்சியாக இருக்கும். திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற எந்த இஸ்லாமியரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சனாதன தர்மத்தை அழிப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகளில் ஈடுபடுகிறார்களா? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

நயினார் நாகேந்திரனின் இந்த கருத்துக்கு திமுக எம்பி கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் "எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?கடந்த தேர்தலில் ஆர்.எஸ்.எஸ் - பாஜகவைப் படுதோல்வி அடையச் செய்து, மக்கள் தூக்கியெறிந்த ஃபைசாபாத் தொகுதியில் உள்ள அயோத்தியைப் போலவா? கவலை வேண்டாம்! அப்படி தான் தமிழ்நாடு பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து

Bagavan Sri RamarDec 8, 2025 - 04:06:19 PM | Posted IP 104.2*****

Bagavan Sri Ramar atchi seytha Ayothi pola thamilnadu maaravendum madam.

நாடக குடும்பம்Dec 7, 2025 - 01:15:07 PM | Posted IP 162.1*****

என்ன சொல்ல வாறீங்க ?? பாகிஸ்தான் போல் தமிழ்நாடு மாறணுமா?? ஓட்டு பிச்சை எடுக்க பிஜேபி உள்ள வந்துடும், பூந்துடும் சொல்லி வந்து பிஜேபி யை உள்ளே விட்டதே உங்க குடும்பம் தான். எதிர்க்கட்சியாக இருக்கும்போது மோடி தமிழ்நாட்டுக்கு வந்தால் சுடலை கருப்பு பலூன் விட சொல்லுவாங்களாம், ஆட்சிக்கு வந்தவுடன் விமான நிலையத்தில் சென்று சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்பார்களாம். போதும் உங்க நாடகம் . போங்கப்பா .

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory