» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கைவினைக் கலைஞர்கள் ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம்: ஆட்சியர் அழைப்பு!

வியாழன் 11, டிசம்பர் 2025 10:35:09 AM (IST)

சிறுபான்மையின கைவினைக் கலைஞர்கள் கைவினைக் கலைஞர் கடன் திட்டத்தில் கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் அறிவித்துள்ளார். 

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் (TAMCO) கீழ் விராசாத் கைவினைக் கலைஞர் கடன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் தையல் தொழில் / பாய்முடைதல் / கூடை பின்னுதல் / தறி நெய்தல் / ஆரி ஓர்க். / எம்பிராய்டரி கைவினைப் பொருட்கள் செய்தல் / மரச்சாமான்கள் செய்தல் மற்றும் இதர கைவினைத் தொழில்கள் மேற்கொள்ளும் சிறுபான்மையின கைவினைக் கலைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டு குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது.

திட்டம் -1-ன் கீழ் பயன்பெற விரும்பும் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் சிறுபான்மையினக் கைவினைக் கலைஞர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.300 இலட்சத்திற்கு மிகாமல் உள்ளவர்களுக்கு அதிக பட்ச கடன் தொகை ரூ.10.00 இலட்சம் வழங்கப்படும். மேலும் இத்திட்டத்தின் கீழ் ஆண் பயனாளிகளுக்கு 5% மற்றும் பெண் பயனாளிகளுக்கு 4% ஆண்டு வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கப்படும்.

திட்டம் -2 ன் கீழ் பயன்பெற நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் சிறுபான்மையினக் கைவினைக் கலைஞர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8.00 இலட்சத்திற்கு மிகாமல் உள்ளவர்களுக்கு அதிக பட்ச கடன் தொகை ரூ.10.00 இலட்சம் வழங்கப்படும். மேலும் ஆண் பயனாளிகளுக்கு 6% மற்றும் பெண் பயனாளிகளுக்கு 5% ஆண்டு வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கப்படும். மேற்படி திட்டம் -1 மற்றும் திட்டம் 2 ன் கீழ் பெறப்படும் கடனை 5.ஆண்டுகளுக்குள் திரும்ப செலுத்த வேண்டும்.

ஜெயின் போன்ற விராசத் எனவே. இம்மாவட்டத்தில் வசிக்கும் கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் சிறுபான்மையினத்தைச் சார்ந்த கைவினைக் கலைஞர்கள் மேற்படி கைவினைக் கலைஞர் கடன் திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்புவோர் விண்ணப்பங்களை https://tamco.tn.gov.in/ என்ற இணையதள முகவரி அல்லது திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் நேரில் அணுகி பெற்று கொள்ளலாம் மேற்படி திட்டத்தின் கீழ் அதிக அளவில் விண்ணப்பித்து பயனடையுமாறு ஆட்சியர் இரா.சுகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory