» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நண்பர் இறந்த துக்கத்தில் ஐடிஐ மாணவர் தற்கொலை: கன்னியாகுமரியில் சோகம்
திங்கள் 9, பிப்ரவரி 2026 11:12:39 AM (IST)
நண்பரின் பிரிவைத் தாங்க முடியாமல் ஐடிஐ மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், செண்பகராமன்புதூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், செண்பகராமன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் வசந்தகுமார் (20). ஐடிஐ மாணவரான இவர், நேற்று தனது வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தகவல் அறிந்து விரைந்து வந்த ஆரல்வாய்மொழி போலீசார், வசந்தகுமாரின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது: வசந்தகுமாரின் நெருங்கிய நண்பரான முத்து கிஷோர், கடந்த 3-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். உயிர்த்தோழனின் மறைவால் வசந்தகுமார் கடந்த சில நாட்களாகக் கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். நண்பன் இல்லாத துக்கத்தில் மனவேதனை அடைந்த வசந்தகுமார், நேற்று இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே வாரத்தில் அடுத்தடுத்து இரு நண்பர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவர்: நெல்லை பேருந்து நிலையத்தில் பயங்கரம்!
ஞாயிறு 15, மார்ச் 2026 2:07:23 PM (IST)

தொழிலதிபரிடம் ரூ.25 கோடி மோசடி : நெல்லை திமுக கவுன்சிலரின் கணவர் கைது!
ஞாயிறு 15, மார்ச் 2026 9:47:30 AM (IST)

பாரத்நெட் திட்டத்தில் தொழில் பங்கீட்டாளர்கள் தேர்வு: நிதி தகுதி தளர்வு - ஆட்சியர் தகவல்!
சனி 14, மார்ச் 2026 5:38:31 PM (IST)

சிறப்பாகப் பணியாற்றிய மருத்துவர்களுக்கு விருது : ஆட்சியர் இரா.சுகுமார் வழங்கினார்
சனி 14, மார்ச் 2026 10:59:20 AM (IST)

நெல்லையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : தாயின் 2-வது கணவர் போக்சோவில் கைது!
சனி 14, மார்ச் 2026 8:43:47 AM (IST)

வாக்குச்சாவடி மறுசீரமைப்பு, தேர்தல் கூட்டங்கள் : அரசியல் கட்சிகளுடன் ஆட்சியர் ஆலோசனை!
வெள்ளி 13, மார்ச் 2026 5:41:13 PM (IST)

