» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் திடீர் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

சனி 7, மார்ச் 2026 4:52:06 PM (IST)

தூத்துக்குடி உட்பட தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்ட வருவாய் அலுவலர்கள் (DRO) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலராக பணிபுரிந்து வந்த ஆ. இரவிச்சந்திரன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, நாகர்கோவில் ஒழுங்கு நடவடிக்கைகள் தீர்ப்பாயத்தின் ஆணையராகப் பணிபுரிந்து வந்த மூ. குருச்சந்திரன் தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய வருவாய் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடியில் இருந்து விடுவிக்கப்படும் இரவிச்சந்திரன், திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலராக (நில எடுப்பு) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் திண்டுக்கல்லில் பணிபுரிந்து வந்த மு. கோட்டைக்குமாருக்கு பதிலாக இந்தப் பொறுப்பை ஏற்பார். இதுபோல் 20 வருவாய் அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவு பிறப்பித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory