» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

காவல்துறையில் குறிப்பிட்ட சமூகத்தின் ஆதிக்கம்? ஷியாம் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு!

செவ்வாய் 10, மார்ச் 2026 3:14:37 PM (IST)



காவல்துறையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டதாக புதிய தமிழகம் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் ஷியாம் கிருஷ்ணசாமி குற்றம் சாட்டினார்.

நாங்குநேரி அருகே பெரும்பத்தில் கடந்த 2-ஆம் தேதி இரவு 9 பேர் கொண்ட கும்பல் நடத்திய தாக்குதலில், மாற்றுத்திறனாளி ஜான் என்பவர் உயிரிழந்தார். இந்நிலையில், உயிரிழந்த ஜானின் குடும்பத்தினரை புதிய தமிழகம் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் ஷியாம் கிருஷ்ணசாமி இன்று நேரில் சந்தித்து தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார்.

இந்தத் தாக்குதலின் போது அரிவாள் வெட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் பிரபாகரன் மற்றும் ராமசாமி ஆகியோரையும் அவர் சந்தித்துப் பேசினார். அப்போது, அன்று இரவு நடந்த சம்பவங்கள் குறித்து அவர்களிடம் விரிவாகக் கேட்டறிந்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஷியாம் கிருஷ்ணசாமி தெரிவித்ததாவது: காவல்துறையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார். இத்தகைய பாரபட்சமான செயல்பாடுகளே இது போன்ற வன்முறைச் சம்பவங்கள் தொடரக் காரணமாக அமைகின்றன. அஜித்குமார் மற்றும் ஆகாஷ் ஆகியோரின் மரணங்கள் இதற்குச் சான்றாகும்.

கடந்த 4 ஆண்டுகளாகப் பட்டியல் இன மக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. நாங்குநேரி சம்பவம் தமிழக அரசின் நிர்வாகத் தோல்வியையே காட்டுகிறது. இவ்வளவு பெரிய அசம்பாவிதம் நடந்தும் முதலமைச்சர் இதுவரை கண்டனம் தெரிவிக்கவில்லை. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசின் சார்பில் நிவாரணம் வழங்கவும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory