» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லை அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை: கொத்தனார் போக்சோ சட்டத்தில் கைது
திங்கள் 16, மார்ச் 2026 8:35:34 AM (IST)
திருநெல்வேலி அருகே ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொத்தனாரை, அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
திருநெல்வேலி அருகே மானூர் தாலுகா மாவடி பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (36). கொத்தனாரான இவர், 5-ஆம் வகுப்பு பயிலும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அந்த மாணவி, பள்ளியில் தனது ஆசிரியையிடம் நடந்தவற்றைக் கூறி அழுதுள்ளார்.
உடனடியாக அந்த ஆசிரியை, மாவட்டக் குழந்தைகள் நல அலுவலர்களுக்குத் தகவல் அளித்தார். குழந்தைகள் நல அலுவலர்கள் மாணவியிடம் முதற்கட்ட விசாரணை நடத்தி, நடந்ததை உறுதி செய்தனர். இதனைத் தொடர்ந்து, குழந்தைகள் நலத் துறையினர் நெல்லை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர். சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை இழைத்ததாக உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கொத்தனார் முருகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தலைமறைவாக இருந்த முருகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து தனியார் நிறுவன மேலாளரிடம் நகை, பணம் பறிப்பு: 2பேர் கைது!
திங்கள் 16, மார்ச் 2026 8:33:28 AM (IST)

மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவர்: நெல்லை பேருந்து நிலையத்தில் பயங்கரம்!
ஞாயிறு 15, மார்ச் 2026 2:07:23 PM (IST)

தொழிலதிபரிடம் ரூ.25 கோடி மோசடி : நெல்லை திமுக கவுன்சிலரின் கணவர் கைது!
ஞாயிறு 15, மார்ச் 2026 9:47:30 AM (IST)

பாரத்நெட் திட்டத்தில் தொழில் பங்கீட்டாளர்கள் தேர்வு: நிதி தகுதி தளர்வு - ஆட்சியர் தகவல்!
சனி 14, மார்ச் 2026 5:38:31 PM (IST)

சிறப்பாகப் பணியாற்றிய மருத்துவர்களுக்கு விருது : ஆட்சியர் இரா.சுகுமார் வழங்கினார்
சனி 14, மார்ச் 2026 10:59:20 AM (IST)

நெல்லையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : தாயின் 2-வது கணவர் போக்சோவில் கைது!
சனி 14, மார்ச் 2026 8:43:47 AM (IST)

