» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மாணவி கொலை வழக்கு: டிஎன்ஏ சோதனையில் சிக்கிய குற்றவாளி - ரகசிய இடத்தில் விசாரணை
வியாழன் 19, மார்ச் 2026 12:28:00 PM (IST)
வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில், டிஎன்ஏ பரிசோதனை அடிப்படையில் ஒரு நபர் அடையாளம் காணப்பட்டு, போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர், கடந்த 11-ஆம் தேதி அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இது தொடர்பாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாகத் துணை கண்காணிப்பாளர் சுந்தரபாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். குற்றவாளிகளை விரைந்து பிடிக்கக் காவல்துறை சார்பில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது. சந்தேகத்தின் அடிப்படையில் பலரிடம் விசாரணை நடத்தப்பட்டதோடு, வேடநத்தம் கிராமத்தில் வீடு வீடாகவும் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
விசாரணையின் ஒரு பகுதியாக, சந்தேகத்திற்குரிய 5 நபர்களிடம் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்தப் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில், குற்றவாளி ஒருவன் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. தற்போது அந்த நபரைப் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த நபர் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் ஆய்வு புகார் அளிக்க எண்கள் அறிவிப்பு
வியாழன் 19, மார்ச் 2026 3:28:49 PM (IST)

சட்டமன்றத் தேர்தல் 2026: 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு மனிதச் சங்கிலி!
புதன் 18, மார்ச் 2026 3:28:16 PM (IST)

பங்குனி உத்திரத் திருவிழா: நெல்லை மாவட்டத்திற்கு ஏப். 1-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
புதன் 18, மார்ச் 2026 12:51:02 PM (IST)

கடன் தொல்லையால் விபரீத முடிவு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு!
புதன் 18, மார்ச் 2026 10:26:15 AM (IST)

அரசுப் பணம் கையாடல் புகார்: புதுப்பட்டி ஊராட்சி செயலாளர் அதிரடி சஸ்பெண்ட்!
புதன் 18, மார்ச் 2026 10:16:10 AM (IST)

நாங்குநேரி அருகே விவசாயி வெட்டிக்கொலை : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
புதன் 18, மார்ச் 2026 8:27:31 AM (IST)


தமிழன்Mar 19, 2026 - 01:28:47 PM | Posted IP 104.2*****