» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
முதல்வர் மு.க. ஸ்டாலின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை: தூத்துக்குடியில் பரபரப்பு
வெள்ளி 3, ஏப்ரல் 2026 8:22:40 PM (IST)
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் மறித்துச் சோதனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, திமுக வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் செய்வதற்காகத் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வந்தடைந்தார்.
அங்கு அவருக்குத் தூத்துக்குடி மாவட்ட திமுக வேட்பாளர்கள் கீதா ஜீவன் (தூத்துக்குடி), அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் (திருச்செந்தூர்), ராமஜெயம் (ஒட்டப்பிடாரம்), கருணாநிதி (கோவில்பட்டி), மார்க்கண்டேயன் (விளாத்திகுளம்) மற்றும் மேயர் ஜெகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வரவேற்பு நிகழ்ச்சிக்குப் பிறகு, திருநெல்வேலியில் நடைபெற உள்ள தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் காரில் புறப்பட்டார். வாகைகுளம் அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, அங்குப் பணியில் இருந்த தேர்தல் பறக்கும் படையினர் முதல்வரின் வாகனத்தை மறித்தனர்.
உடனடியாகக் காரிலிருந்து கீழே இறங்கிய முதல்வர், அதிகாரிகள் தனது வாகனத்தைச் சோதனை செய்ய முழு ஒத்துழைப்பு அளித்தார். அதிகாரிகள் காரின் உட்பகுதிகள் மற்றும் உடைமைகளை முழுமையாகச் சோதனை செய்தனர்.
சோதனையின் போது பாதுகாப்பு கருதி அங்கிருந்த பொதுமக்களைப் போலீசார் அகற்ற முயன்றனர். அப்போது குறுக்கிட்ட முதல்வர், "அவர்களை ஒன்றும் செய்ய வேண்டாம், அருகே வரச் சொல்லுங்கள்" என்று கூறி மக்களைத் தன் அருகே அழைத்தார். அங்கு நின்றிருந்த ஒரு மாணவியிடம், "என்ன படிக்கப் போகிறாய்? நன்றாகப் படிக்க வேண்டும்" என்று கனிவுடன் நலம் விசாரித்தார்.
சோதனை முடிந்து எவ்விதப் பொருட்களும் கண்டறியப்படாத நிலையில், அதிகாரிகள் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து முதல்வர் மீண்டும் காரில் ஏறி திருநெல்வேலி நோக்கிப் புறப்பட்டுச் சென்றார். முதல்வரின் வாகனத்தையே தேர்தல் பிரிவினர் சோதனை செய்த நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் 100 அடி நீளத் துணியில் தேர்தல் ஓவியம்: மாணவ, மாணவிகள் அசத்தல்!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 4:16:59 PM (IST)

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லை வருகை: பலத்த பாதுகாப்பு - ட்ரோன்களுக்குத் தடை!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 3:34:01 PM (IST)

டேராடூன் ராணுவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்.5!
வியாழன் 2, ஏப்ரல் 2026 5:42:22 PM (IST)

தேர்தல் விளம்பரங்களுக்கு முன் அனுமதி கட்டாயம்: ஆட்சியர் இரா.சுகுமார் அதிரடி உத்தரவு!
வியாழன் 2, ஏப்ரல் 2026 5:08:56 PM (IST)

பாஜக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும்: நயினார் நாகேந்திரன் உறுதி!
வியாழன் 2, ஏப்ரல் 2026 4:49:44 PM (IST)

இலவசமாக மணல் கேட்டு மிரட்டிய சப்-இன்ஸ்பெக்டர் - காவலர் பணி இடைநீக்கம்: எஸ்.பி., அதிரடி!
வியாழன் 2, ஏப்ரல் 2026 8:41:43 AM (IST)


ஆஆமாApr 3, 2026 - 09:10:24 PM | Posted IP 172.7*****