» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
செல்போன் பார்த்ததைக் கண்டித்த பெற்றோர்: 8ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:23:45 AM (IST)
நெல்லையில் செல்போன் பயன்படுத்துவதைக் கண்டித்ததால், மனமுடைந்த 8-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை டவுன் சேரன்மகாதேவி சாலை, முகமது அலி தெருவைச் சேர்ந்தவர் குமார். இவர் பேட்டையில் உள்ள ஒரு முடித்திருத்தும் கடையில் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மகாராணி. இவர்களது மகள் முத்துமாரி (13), டவுனில் உள்ள ஒரு மாநகராட்சிப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
தற்போது பள்ளித் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், முத்துமாரி பாடங்களைப் படிக்காமல் செல்போனில் நேரத்தைச் செலவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனைப் பார்த்த அவரது பெற்றோர், தேர்வுக் காலத்தில் செல்போன் பார்க்கக் கூடாது என மென்மையாகக் கண்டித்துள்ளனர்.
இதனால் கடும் விரக்தியடைந்த முத்துமாரி, நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பிய பெற்றோர், மகள் உயிரிழந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியில் கதறி அழுதனர். அவர்களது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு கூடினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நெல்லை டவுன் இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார், முத்துமாரியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகப் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறிய காரணத்திற்காக ஒரு இளம் உயிர் பறிபோனது அப்பகுதி மக்களிடையே மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை, ராமேசுவரம் ரயில்கள் தாம்பரம் வரை மட்டுமே இயக்கம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:28:06 AM (IST)

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா... பாட்டு பாடி முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம்!
சனி 4, ஏப்ரல் 2026 10:44:09 AM (IST)

பேருந்து மோதி நண்பர்கள் இருவர் உயிரிழப்பு: திருவிழாவிற்கு வந்த இடத்தில் சோகம்
சனி 4, ஏப்ரல் 2026 8:53:59 AM (IST)

கடன் கேட்ட நண்பனை கல்லால் அடித்துக் கொன்ற வாலிபர் கைது: குடிபோதையில் வெறிச்செயல்!
சனி 4, ஏப்ரல் 2026 8:47:35 AM (IST)

நெல்லையில் 100 அடி நீளத் துணியில் தேர்தல் ஓவியம்: மாணவ, மாணவிகள் அசத்தல்!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 4:16:59 PM (IST)

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லை வருகை: பலத்த பாதுகாப்பு - ட்ரோன்களுக்குத் தடை!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 3:34:01 PM (IST)

