» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருநெல்வேலி காவல் நிலையங்களை தேர்தல் காவல் பார்வையாளர் ஆய்வு!
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 11:40:09 AM (IST)

திருநெல்வேலி மேலப்பாளையம் மற்றும் பெருமாள்புரம் காவல் நிலையங்களை மாவட்ட தேர்தல் காவல் பார்வையாளர் சுப்ரிதம் சர்கார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 நடைபெறுவதை ஒட்டி 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு காவல் பார்வையாளராக நியமிக்கப்பட்ட சுப்ரிதம் சர்கார், மேலப்பாளையம் மற்றும் பெருமாள்புரம் காவல் நிலையங்களையும், பதட்டமான வாக்குச்சாவடிகளில் மேற்கொண்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட்ட வசதிகள் குறித்தும், பாதுகாப்பு அம்சங்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் காவல்துறையின் மூலம் மேற்கொண்ட பணிகள் தொடர்பாக மேலப்பாளையம் முஸ்லீம் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையம், பெரும்மாள்புரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையம், திம்மராஜபுரம் மாநகராட்சி ஒருங்கிணைந்த குழந்தைகள் சேவைகள் மையம் வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட தேர்தல் காவல் பார்வையாளர் காவல்துறை உள்ளிட்ட துறை அலுவலர்களுடன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
தொடர்ந்து மேலப்பாளையம் மற்றும் பெரும்மாள்புரம் காவல் நிலையங்களில் தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் வாக்குப்பதிவு நாளன்று மேற்கொள்ள வேண்டிய செயல்திட்டம் குறித்து விரிவாக பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். தொடர்ந்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் மேலும் கைது செய்யப்பட வேண்டிய நபர்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கொக்கிரகுளத்தில் புதிய ஆதார் சேவை மையம் : ஆட்சியர் இரா.சுகுமார் திறந்து வைத்தார்
வியாழன் 21, மே 2026 4:38:35 PM (IST)

நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீண்..? மண்டல மேலாளர் மறுப்பு; 2 பேர் பணிநீக்கம்!
வியாழன் 21, மே 2026 11:20:26 AM (IST)

விவிபேட் இயந்திரங்களின் பேப்பர் ரோல்களை அகற்றும் பணி: ஆட்சியர் இரா.சுகுமார் நேரில் ஆய்வு!
செவ்வாய் 19, மே 2026 5:50:43 PM (IST)

வங்கிப் பெண் ஊழியர் நடுரோட்டில் சரமாரி வெட்டிக் கொலை: நெல்லையில் கொடூரம்!
ஞாயிறு 17, மே 2026 11:28:21 AM (IST)

வெள்ள பாதிப்புகளைத் தடுக்கப் போர்க்கால நடவடிக்கை : ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்சியர் உத்தரவு!
சனி 16, மே 2026 11:07:43 AM (IST)

சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக இபிஎஸ் ஆதரவாளர்கள் நூதன போராட்டம்!
வெள்ளி 15, மே 2026 11:27:59 AM (IST)


