» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ஆலங்குளம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!
புதன் 8, ஏப்ரல் 2026 3:38:44 PM (IST)
ஆலங்குளம் பகுதியில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: ஆலங்குளம் தொகுதிக்குட்பட்ட மருதம்புத்தூர் ஊராட்சியில் மணிகண்டன் என்ற பனைத் தொழிலாளி பனைமரத்தில் பதநீர் இறக்கிக் கொண்டிருந்தார். அப்போது, அவர் கள் இறக்கியதாகக் கூறி, காவல்துறையினர் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த மோதலின் போது, ஆலங்குளம் காவல் உதவி ஆய்வாளர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், இரண்டு குண்டுகள் துளைத்து தொழிலாளி மணிகண்டன் படுகாயமடைந்துள்ளார். தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தமிழ்நாடு முழுவதும் உள்ள பனைத் தொழிலாளர்களிடையே இது ஒருவித அச்சத்தையும் பீதியையும் உண்டாக்கியுள்ளது.
தேர்தல் நேரத்திலும் எந்தவிதக் கட்டுப்பாடும் இன்றி, திமுக அரசின் காவல்துறை தொடர்ந்து 'ஏவல் துறையாக'ச் செயல்படுவது கண்டிக்கத்தக்கது. பதநீர் இறக்கிய தொழிலாளி மீது பொய்க் குற்றம் சுமத்தி, துப்பாக்கிச் சூடு நடத்திய காவல் உதவி ஆய்வாளர் மீது தமிழகக் காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) உடனடியாகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்: 3 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்!
சனி 23, மே 2026 8:56:35 AM (IST)

தேசிய டிஜிட்டல் கால்நடை இயக்கம்: கால்நடைகளின் விபரங்களைப் புதுப்பிக்க ஆட்சியர் அறிவுறுத்தல்!
வெள்ளி 22, மே 2026 5:47:46 PM (IST)

கொக்கிரகுளத்தில் புதிய ஆதார் சேவை மையம் : ஆட்சியர் இரா.சுகுமார் திறந்து வைத்தார்
வியாழன் 21, மே 2026 4:38:35 PM (IST)

நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீண்..? மண்டல மேலாளர் மறுப்பு; 2 பேர் பணிநீக்கம்!
வியாழன் 21, மே 2026 11:20:26 AM (IST)

விவிபேட் இயந்திரங்களின் பேப்பர் ரோல்களை அகற்றும் பணி: ஆட்சியர் இரா.சுகுமார் நேரில் ஆய்வு!
செவ்வாய் 19, மே 2026 5:50:43 PM (IST)

வங்கிப் பெண் ஊழியர் நடுரோட்டில் சரமாரி வெட்டிக் கொலை: நெல்லையில் கொடூரம்!
ஞாயிறு 17, மே 2026 11:28:21 AM (IST)


