» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பிரபல இதய நோய் நிபுணர் டாக்டர் சி.எஸ். நரேந்திரன் காலமானார்

புதன் 29, ஏப்ரல் 2026 3:11:53 PM (IST)

புகழ்பெற்ற இதய நோய் சிறப்பு நிபுணரான டாக்டர் சி.எஸ். நரேந்திரன், உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை காலமானார். 

தூத்துக்குடியில், புகழ்பெற்ற இதய நோய் சிறப்பு நிபுணரான டாக்டர் சி.எஸ். நரேந்திரன், உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை 1.20 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 85. 

டாக்டர் நரேந்திரன், மருத்துவத் துறையில் பல தசாப்தங்களாகத் தொண்டாற்றியவர். ஆயிரக்கணக்கான இதய நோயாளிகளுக்கு மறுவாழ்வு அளித்த பெருமைக்குரியவர். 

இவரது கனிவான அணுகுமுறையும், மருத்துவ நுணுக்கங்களும் சக மருத்துவர்களாலும் நோயாளிகளாலும் என்றும் போற்றப்படுபவை. மறைந்த டாக்டர் நரேந்திரன் உடல், இறுதி அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அன்னாரது இறுதிச்சடங்கு மற்றும் நல்லடக்கம் நாளை 30.04.2026 (வியாழக்கிழமை) காலை 11.00 மணியளவில் டூவிபுரம், 5வது தெருவில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைத்து நடைபெறுகிறது.

டாக்டர் சி.எஸ். நரேந்திரன் மறைவு மருத்துவத் துறைக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அன்னாரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் மருத்துவத்துறையினர் மற்றும் பொதுமக்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 


மக்கள் கருத்து

C ThirunavukkarasuApr 30, 2026 - 08:57:46 AM | Posted IP 172.7*****

Very good doctor in Tuticorin city

THAMILANApr 29, 2026 - 06:07:42 PM | Posted IP 104.2*****

மனித நேயமுள்ள நல்ல மருத்துவர். அதிகம் பணத்திற்கு ஆசை படாத மாமனிதர் ஆழ்ந்த இரங்கல்.

சங்கரன்Apr 29, 2026 - 05:13:47 PM | Posted IP 162.1*****

ஆழ்ந்த இரங்கல்

D.THIRUMALAI KUMAR.Apr 29, 2026 - 05:00:46 PM | Posted IP 172.7*****

Very good doctor. Great loss

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory