» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மு.க.அழகிரியை திமுகவில் சேர்க்க வலியுறுத்தல் : செல்போன் டவரில் ஏறி ஆதரவாளர் போராட்டம்!

புதன் 29, ஏப்ரல் 2026 3:31:24 PM (IST)



முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை மீண்டும் திமுகவில் சேர்க்க வலியுறுத்தி, கோவில்பட்டியில் ஒருவர் செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையைச் சேர்ந்தவர் ஜான் (57). இவர் தற்போது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சண்முகா நகரில் வசித்து வருகிறார். அங்கு மோட்டார் வாகன உரிமம் பெறுதல், புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளுக்கான ஆலோசகராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், இன்று காலை கோவில்பட்டி தாமஸ் நகர் பகுதியிலுள்ள சுமார் 100 அடி உயரமுள்ள தனியார் செல்போன் டவர் மீது கையில் பெட்ரோல் கேனுடன் ஏறிய அவர், "முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை உடனடியாக திமுகவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்; இல்லையெனில் தீக்குளிப்பேன்" என மிரட்டல் விடுத்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது, கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்ற காவலர், ஜானிடம் நயமாகப் பேசி அவரது கவனத்தைத் திசைதிருப்பினார். அவரது துரிதமான செயலால், ஜான் கையில் வைத்திருந்த பெட்ரோல் கேனை கீழே போட வைத்தார்.

பெட்ரோல் கேன் மீட்கப்பட்ட போதிலும், ஜான் தொடர்ந்து டவர் உச்சியிலேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவரைப் பாதுகாப்பாக கீழே இறக்கும் முயற்சியில் தீயணைப்புத் துறையினரும் காவல்துறையினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் திரண்டதால் போக்குவரத்து நெரிசலும், பரபரப்பும் நிலவி வருகிறது.


மக்கள் கருத்து

மூஞ்சியும் முகரையும் பாருங்கApr 30, 2026 - 12:01:47 PM | Posted IP 104.2*****

குதித்து சாவட்டும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory