» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லை மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை: அப்பாவு பின்னடைவு!
திங்கள் 4, மே 2026 11:04:50 AM (IST)
நெல்லை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் அம்பாசமுத்திரம் தவிர மீதமுள்ள நான்கு தொகுதியிலும் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை வகித்து வருகிறது. ராதாபுரம் தொகுதியில் சபாநாயகர் அப்பாவு தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார்.
தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி ஒரே கட்டமாக நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணியில் இருந்து எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் ஐந்து தொகுதிகளில் அம்பாசமுத்திரம் தவிர மீதமுள்ள நான்கு தொகுதியிலும் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை வகித்து வருகிறது. குறிப்பாக ராதாபுரம் தொகுதி திமுக வேட்பாளரான சபாநாயகர் அப்பாவு ராதாபுரம் பகுதியில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார்.
4-வது சுற்று முடிவில் அப்பாவு 13,224 வாக்குகள் பெற்ற நிலையில் தவெக வேட்பாளர் கிறிஸ்டோபர் 14,950 வாக்குகள் பெற்று 1,726 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். பாஜக வேட்பாளர் 10,545 வாக்குகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வங்கிப் பெண் ஊழியர் நடுரோட்டில் சரமாரி வெட்டிக் கொலை: நெல்லையில் கொடூரம்!
ஞாயிறு 17, மே 2026 11:28:21 AM (IST)

வெள்ள பாதிப்புகளைத் தடுக்கப் போர்க்கால நடவடிக்கை : ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்சியர் உத்தரவு!
சனி 16, மே 2026 11:07:43 AM (IST)

சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக இபிஎஸ் ஆதரவாளர்கள் நூதன போராட்டம்!
வெள்ளி 15, மே 2026 11:27:59 AM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டு 50 பேர் குண்டர் சட்டத்தில் கைது!
புதன் 13, மே 2026 4:16:28 PM (IST)

நெல்லையில் வீடு புகுந்து இளம்பெண் பலாத்காரம் - கொத்தனார் கைது!
செவ்வாய் 12, மே 2026 8:42:37 AM (IST)

விஜய் முதல்வராவதில் இழுபறி நீடிப்பால் விரக்தி: தவெக நிர்வாகி தீக்குளித்து தற்கொலை முயற்சி
சனி 9, மே 2026 3:10:10 PM (IST)


