» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கூட்டுப் பாலியல் வன்கொடுமை - கொலை வழக்குகள் : 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது!

ஞாயிறு 21, ஜூன் 2026 8:55:35 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைக் குற்றங்களில் ஈடுபட்டு ஏற்கனவே கைதாகியிருந்த 5 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.

தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரை, 3 பேர் கொண்ட கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டியுள்ளது. மேலும், அந்தப் பெண்ணிடமிருந்து பணம், கைப்பேசி மற்றும் 2 வெள்ளி மோதிரங்களைப் பறித்துச் சென்றனர். இது குறித்து அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இக்குற்றச் செயலின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, மாவட்ட காவல் துறையின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அதன்படி, தூத்துக்குடி பாத்திமா நகரைச் சேர்ந்த மோகித் (22), மேல அலங்காரத்தட்டு பகுதியைச் சேர்ந்த ரித்தீஷ் (19) மற்றும் திலோத் பெர்லின் (21) ஆகிய 3 பேரையும் போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர்.

பெண் கொலை வழக்கு வழக்கு :

தூத்துக்குடி அண்ணா நகர் 12ஆவது தெரு மங்களபுரம் பகுதியில் கடந்த மே 21ஆம் தேதி அன்று, ஆட்டோ ஓட்டுநரான பூபால்ராஜாவின் மனைவி அமுதா (50) என்பவர் குடும்பப் பிரச்சினை காரணமாகப் பலசரக்கு கடைக்குள் புகுந்து உறவினர் ஒருவரால் அவரது நண்பருடன் சேர்த்து வெட்டிக் கொலை செய்யப்பட்டார். 

இக்கோடூரக் கொலைச் சம்பவம் குறித்து தூத்துக்குடி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை நடத்தி வந்தனர். இந்தக் கொலை வழக்கில் கைதாகி விசாரணையில் இருந்த கே.வி.கே. நகரைச் சேர்ந்த ஆதிமூலம் மகன் சங்கர் (33) மற்றும் மகேந்திரன் மகன் மதன்குமார் (32) ஆகிய இருவரையும், மாவட்ட காவல் துறையின் பரிந்துரையை ஏற்று மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவின்படி, குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory