» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடி கூட்டு குடிநீர் திட்ட டெண்டரில் பல கோடி ரூபாய் மோசடி: முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார்!
புதன் 19, ஆகஸ்ட் 2026 3:14:03 PM (IST)
தூத்துக்குடி பராமரிப்புக் கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கூட்டு குடிநீர் திட்டங்களை இயக்கும் டெண்டரில், RS & CO என்ற தனியார் நிறுவனம் போலி நிதி ஆவணங்களைச் சமர்ப்பித்து முறைகேடு செய்துள்ளதாகத் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் சங்கம் (CITU) முதல்வரின் முகவரித்துறையில் (CM Cell) புகார் அளித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 24 கூட்டு குடிநீர் திட்டங்களை 2026 முதல் 2029 வரை 3 ஆண்டுகளுக்குப் பராமரித்து இயக்குவதற்கான டெண்டர் கடந்த 19.01.2026 அன்று ஆன்லைன் வழியே நடைபெற்றது.RS & CO நிறுவனத்தின் உரிமையாளர் R.சுரேஷ் என்பவர், தனது நிறுவனத்தின் Financial Turnover சான்றிதழில் கோடிக்கணக்கில் நிதி வரவை உயர்த்திக் காட்டிப் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளார்.
2023-2024 நிதியாண்டில் உண்மையான Turnover ரூ. 5.12 கோடி மட்டுமே; ஆனால் போலி ஆவணத்தில் ரூ. 47.55 கோடி (ரூ. 42 கோடி கூடுதலாக) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 2024-2025 நிதியாண்டில் உண்மையான Turnover ரூ. 14.62 கோடிகள் மட்டுமே; ஆனால் ரூ. 96.58 கோடி (ரூ. 82 கோடி கூடுதலாக) எனக் காட்டி மோசடி செய்யப்பட்டுள்ளது.
டெண்டர் விதிகளின்படி ரூ. 56.75 கோடி மதிப்புள்ள டெண்டருக்கு, கடந்த 5 ஆண்டுகளில் ஏதேனும் 2 ஆண்டுகளில் 33% சதவீதமான ரூ. 18.72 கோடி Turnover செய்திருக்க வேண்டும். ஆனால் RS & CO நிறுவனம் இந்தத் தகுதியைப் பெறவில்லை.
ஆடிட்டர் மற்றும் அரசு அலுவலக விசாரணையில் RS & CO நிறுவனம் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்தது உறுதி செய்யப்பட்ட பின்பும், வாரிய அதிகாரிகள் உள்நோக்கத்துடன் டெண்டரைத் தள்ளுபடி செய்யாமல் பணி ஆணை (Work Order) வழங்கியுள்ளதாகச் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. இதற்காக அதிகாரிகளுக்குக் கோடிக்கணக்கில் ஆதாயம் கிடைத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, RS & CO நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டெண்டர் ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அந்நிறுவனத்தைக் கருப்புப் பட்டியலில் (Blacklist) சேர்க்க வேண்டும். தவறும்பட்சத்தில் நீதிமன்றத்தை நாட நேரிடும் என்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி இளம் பெண்ணை ஏமாற்றிய இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!
சனி 22, ஆகஸ்ட் 2026 12:33:41 PM (IST)

காவல் நிலையத்தில் வாலிபர் தற்கொலை முயற்சி : தலைமை காவலர் உள்பட 2பேர் சஸ்பெண்ட்!
சனி 22, ஆகஸ்ட் 2026 11:31:58 AM (IST)

திருநெல்வேலியில் செப். 19-ல் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் தகவல்!
சனி 22, ஆகஸ்ட் 2026 11:09:15 AM (IST)

ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: வழக்கறிஞர் அதிரடி கைது!
சனி 22, ஆகஸ்ட் 2026 8:55:08 AM (IST)

நெல்லையில் குரூப் 2 தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் 24ஆம் தேதி தொடங்குகிறது!
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 10:44:13 AM (IST)

சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை!: போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 12:53:39 PM (IST)



muraleeAug 20, 2026 - 10:18:33 AM | Posted IP 104.2*****