» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடியில் தனியார் உணவகத்திற்கு ரூ.50,000 அபராதம் - மாநகராட்சி நிர்வாகம் அதிரடி!
புதன் 19, ஆகஸ்ட் 2026 4:34:18 PM (IST)

தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தூர்வாரப்பட்ட பிரதான மழைநீர் வடிகாலில், உணவு மற்றும் சமையல் கழிவுகளை நேரடியாகக் கலந்த தனியார் உணவகத்திற்கு மாநகராட்சி நிர்வாகம் ரூ. 50,000 அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சியில் எதிர்வரும் வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, மழைநீர் வடிகால்கள், சிறுபாலங்கள் மற்றும் பிரதான வடிகால்களைத் தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், மாநகராட்சி அதிகாரிகளின் கள ஆய்வின் போது, தனியார் உணவகம் ஒன்று விதிமுறைகளுக்கு மாறாக இயந்திரக் குழியுடன் அமைக்கப்பட்டுள்ள பிரதான மழைநீர் வடிகாலில் தனது சமையல் மற்றும் உணவு கழிவுகளை நேரடியாகக் கலந்தது கண்டறியப்பட்டது.
உணவகத்தின் கழிவுகளால் சுமார் 100 மீட்டர் நீளத்திற்கு வடிகாலில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் தேங்கும் சூழல் உருவானது. உடனடியாகத் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் 'ஜெட்ராடு' வாகனம் வரவழைக்கப்பட்டு, அடைப்புகள் அகற்றப்பட்டுச் சீரமைக்கப்பட்டது. பொது சுகாதாரத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்பட்ட அந்தத் தனியார் உணவகத்திற்கு ரூபாய் 50,000/- அபராதம் விதிக்கப்பட்டது.
மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை:
மாநகரப் பகுதிகளில் இயங்கும் உணவு விடுதிகள், வணிக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள், முறையான அனுமதியின்றி மழைநீர் வடிகால்களில் கழிவுநீர் மற்றும் உணவுக் கழிவுகளை நேரடியாகக் கலப்பதைத் தவிர்க்க வேண்டும்.
பொதுவெளியில் உணவுக் கழிவுகளைக் கொட்டினாலோ அல்லது பொது சுகாதாரத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்தினாலோ, பொது சுகாதாரச் சட்டம் மற்றும் உள்ளாட்சி அமைப்புச் சட்ட விதிகளின் கீழ் சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் சி.ப்ரியங்கா எச்சரித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி இளம் பெண்ணை ஏமாற்றிய இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!
சனி 22, ஆகஸ்ட் 2026 12:33:41 PM (IST)

காவல் நிலையத்தில் வாலிபர் தற்கொலை முயற்சி : தலைமை காவலர் உள்பட 2பேர் சஸ்பெண்ட்!
சனி 22, ஆகஸ்ட் 2026 11:31:58 AM (IST)

திருநெல்வேலியில் செப். 19-ல் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் தகவல்!
சனி 22, ஆகஸ்ட் 2026 11:09:15 AM (IST)

ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: வழக்கறிஞர் அதிரடி கைது!
சனி 22, ஆகஸ்ட் 2026 8:55:08 AM (IST)

நெல்லையில் குரூப் 2 தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் 24ஆம் தேதி தொடங்குகிறது!
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 10:44:13 AM (IST)

சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை!: போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 12:53:39 PM (IST)



BabuAug 19, 2026 - 10:36:53 PM | Posted IP 162.1*****