» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ஊரான் வீட்டு நெய்யில் ஸ்வீட் செய்யும் தவெக அரசு : ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 7:51:23 AM (IST)

விளாத்திகுளத்தில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதியுள்ள ஆசிரியர்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 40% என நிர்ணயம் செய்திட வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு டிட்டோஜாக் அமைப்பு சார்பில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டார கல்வி அலுவலகம் முன்பு மாபெரும் கவன ஈர்ப்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய ஒரு ஆசிரியர், தற்போது உள்ள தமிழக அரசு " ஊரான் வீட்டு நெய்யில் ஸ்வீட்” செய்துள்ளார், ஊரான் வீடு என்றால் வேறு எதுவும் கிடையாது நமது வரிப்பணம் தான், கஜானா காலி என்பது இல்லை அது நிறைவாகத்தான் உள்ளது மனம் இருந்தால் ஆசிரியரின் கோரிக்கைகளை தாராளமாக நிறைவேற்றலாம்,நேற்று தமிழக முதல்வர் ஜோசப் விஜய் சட்டசபையில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் சொகுசு கார் மற்றும் பராமரிப்பு செலவு 75 ஆயிரம், உதவியாளர் சம்பளம் 25 ஆயிரம் அறிவித்ததை சுட்டிக்காட்டி தங்களின் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்டசெயலாளர் தலைமை ஜீவானந்தம் வகித்தார், கோவில்பட்டி கல்வி மாவட்ட தலைவர் ரவீந்திரராஜன் முன்னிலை வகித்தார், தமிழக ஆசிரியர் கூட்டணி தலைவர் சேர்மகனி, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி தலைவர் இப்ராகிம் உட்பட பலர் கலந்து கொண்டனர், இதில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் மயில் கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார்.
மக்கள் கருத்து
MmanoharanAug 21, 2026 - 08:39:41 PM | Posted IP 162.1*****
அரசு ஊழியர்கள்
அதிகமாக
ஓட்டு போட்டு
தேடிவைத்தநபர்க்கு
உண்மையான
வாழ்க்கை தெரியாது
படிக்க மட்டும்
தெரியும்
என்ன செய்ய
இன்னும்
நான்கு
வருடங்கள்
இதுதான்
மேலும் தொடரும் செய்திகள்

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி இளம் பெண்ணை ஏமாற்றிய இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!
சனி 22, ஆகஸ்ட் 2026 12:33:41 PM (IST)

காவல் நிலையத்தில் வாலிபர் தற்கொலை முயற்சி : தலைமை காவலர் உள்பட 2பேர் சஸ்பெண்ட்!
சனி 22, ஆகஸ்ட் 2026 11:31:58 AM (IST)

திருநெல்வேலியில் செப். 19-ல் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் தகவல்!
சனி 22, ஆகஸ்ட் 2026 11:09:15 AM (IST)

ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: வழக்கறிஞர் அதிரடி கைது!
சனி 22, ஆகஸ்ட் 2026 8:55:08 AM (IST)

நெல்லையில் குரூப் 2 தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் 24ஆம் தேதி தொடங்குகிறது!
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 10:44:13 AM (IST)

சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை!: போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 12:53:39 PM (IST)



MmanoharanAug 21, 2026 - 08:42:06 PM | Posted IP 104.2*****