» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மகனின் நினைவாக மாபெரும் மாட்டு வண்டி பந்தயம் நடத்திய தந்தையின் நெகிழ்ச்சி செயல்!

சனி 22, ஆகஸ்ட் 2026 12:43:30 PM (IST)

Maatuvandivilathigre.jpg

விளாத்திகுளம் அருகே, தனது மகனின் 15-ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டுத் தந்தை நடத்திய மாபெரும் இரட்டை மாட்டு வண்டி எல்லைப் பந்தயம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகிலுள்ள விருசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவர் தனது மகன் ரமேஷின் 15-ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு, மகன் மீது கொண்ட பாசத்தினாலும் மாட்டு வண்டிப் பந்தயத்தின் மீதுள்ள ஈர்ப்பினாலும் இந்த இரட்டை மாட்டு வண்டி எல்லைப் பந்தயத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்.

இந்தப் போட்டிகள் பூஞ்சிட்டு மற்றும் தேன்சிட்டு என இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டன. பூஞ்சிட்டு பந்தயத்திற்குப் போய்வர 5 மைல் தூரமும், தேன்சிட்டு பந்தயத்திற்குப் போய்வர 4 மைல் தூரமும் நிர்ணயிக்கப்பட்டிருந்தன. திருநெல்வேலி, மதுரை, இராமநாதபுரம், தேனி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 56 ஜோடி மாடுகள் கலந்துகொண்டு இலக்கை நோக்கிச் சீறிப்பாய்ந்தன.

மாட்டு வண்டி பந்தயத்தினை திமுக மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர். போட்டியில் வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கும், வண்டிகளைத் திறம்பட ஓட்டி வந்த சாரதிகளுக்கும் விழா கமிட்டி சார்பாகப் ரொக்கப் பரிசுத் தொகையும் கோப்பைகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory