» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
விநாயகர் கோவில் இடிப்பைக் கண்டித்து பாஜக, இந்து அமைப்புகள் போராட்டம் - குரும்பூரில் பரப்பரப்பு!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 9:28:45 AM (IST)

குரும்பூர் ரயில் நிலையம் அருகே இருந்த விநாயகர் கோவில் அகற்றப்பட்டதைக் கண்டித்து, அதே இடத்தில் கோவிலை மீண்டும் கட்டி விநாயகர் சிலையை மறுபிரதிஷ்டை செய்யக் கோரி பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் ரயில் நிலையம் அருகே பல ஆண்டுகளாக வழிபாட்டில் இருந்து வந்த விநாயகர் கோவில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அதிகாலையில் இடித்து அகற்றப்பட்டது. பக்தர்களின் வழிபாட்டில் இருந்த கோவில் இடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.
பல்லாண்டுகளாகப் வழிபாட்டில் இருந்த கோவில் அகக்கம் செய்யப்பட்டது பக்தர்களின் மத உணர்வுகளைப் பெரிதும் புண்படுத்தும் செயல் எனக் கூறி, இடிக்கப்பட்ட விநாயகர் கோவிலை உடனடியாக அதே இடத்தில் மீண்டும் கட்டி, விநாயகர் சிலையை முறைப்படி மறுபிரதிஷ்டை செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி இளம் பெண்ணை ஏமாற்றிய இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!
சனி 22, ஆகஸ்ட் 2026 12:33:41 PM (IST)

காவல் நிலையத்தில் வாலிபர் தற்கொலை முயற்சி : தலைமை காவலர் உள்பட 2பேர் சஸ்பெண்ட்!
சனி 22, ஆகஸ்ட் 2026 11:31:58 AM (IST)

திருநெல்வேலியில் செப். 19-ல் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் தகவல்!
சனி 22, ஆகஸ்ட் 2026 11:09:15 AM (IST)

ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: வழக்கறிஞர் அதிரடி கைது!
சனி 22, ஆகஸ்ட் 2026 8:55:08 AM (IST)

நெல்லையில் குரூப் 2 தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் 24ஆம் தேதி தொடங்குகிறது!
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 10:44:13 AM (IST)

சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை!: போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 12:53:39 PM (IST)



விநாயகர்Aug 23, 2026 - 04:54:42 PM | Posted IP 172.7*****