» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பைக் விபத்தில் தூத்துக்குடி மாணவர் உயிரிழப்பு : குற்றாலத்திற்கு சென்று திரும்புகையில் சோகம்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 5:03:41 PM (IST)
குற்றாலம் அருகே தடுப்புச்சுவரில் பைக் மோதிய விபத்தில் படுகாயமடைந்த தூத்துக்குடி மாணவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி தாளமுத்து நகர் அன்னை இந்திரா நகரைச் சேர்ந்தவர் இருதய ராஜ். இவரது மகன் மாதேவ் (19). இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். மாதேவ் தனது நண்பரான லிவிங்ஸ்டனுடன் நேற்று முன் தினம் (ஆக. 22) தூத்துக்குடியில் இருந்து குற்றாலத்திற்கு பைக்கில் சென்று குளித்துவிட்டு, மீண்டும் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
தென்காசியை அடுத்துள்ள வேட்டைக்காரன்குளம் அருகே நான்கு வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவரில் பலமாக மோதியது. விபத்தில் பைக் தூக்கி வீசப்பட்டு இருவரும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
அவ்வழியாகச் சென்றவர்கள் அவர்களை மீட்டு நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்குத் தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாதேவ், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து குற்றாலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மக்களுக்கான த.வெ.க. ஆட்சியில் ஊழலுக்கு இடமில்லை : நெல்லையில் அமைச்சர் ஜெகதீஸ்வரி பேச்சு!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:51:53 AM (IST)

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி இளம் பெண்ணை ஏமாற்றிய இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!
சனி 22, ஆகஸ்ட் 2026 12:33:41 PM (IST)

காவல் நிலையத்தில் வாலிபர் தற்கொலை முயற்சி : தலைமை காவலர் உள்பட 2பேர் சஸ்பெண்ட்!
சனி 22, ஆகஸ்ட் 2026 11:31:58 AM (IST)

திருநெல்வேலியில் செப். 19-ல் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் தகவல்!
சனி 22, ஆகஸ்ட் 2026 11:09:15 AM (IST)

ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: வழக்கறிஞர் அதிரடி கைது!
சனி 22, ஆகஸ்ட் 2026 8:55:08 AM (IST)

நெல்லையில் குரூப் 2 தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் 24ஆம் தேதி தொடங்குகிறது!
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 10:44:13 AM (IST)


