» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

டாஸ்மாக் கடையில் பூட்டை உடைத்து திருட்டு: தூத்துக்குடியில் மர்ம நபர்கள் கைவரிசை!

செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 7:52:27 AM (IST)

தூத்துக்குடி திருவிக நகரில் உள்ள டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுபானங்களைத் திருடிச் சென்ற மர்ம நபர்களைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி திருவிக நகரில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு விற்பனை முடிந்ததும் மேலாளர் மற்றும் ஊழியர்கள் வழக்கம்போல் கடையைப் பூட்டிவிட்டுச் சென்றுள்ளனர். நேற்று திங்கள்கிழமை நண்பகல் 12 மணியளவில் ஊழியர்கள் கடையைத் திறக்க வந்தபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

கடையின் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த ஏராளமான மதுபாட்டில்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இது குறித்துக் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், தூத்துக்குடி தென்பாகம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்ட விரல்ரேகை நிபுணர்கள், கடையில் பதிவாகியிருந்த விரல்ரேகைகளைச் சேகரித்தனர். அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் காவல்துறையினர் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள தென்பாகம் போலீசார், சமீபத்தில் கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்துள்ள சில சந்தேக நபர்களை இலக்கு வைத்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory