» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடியில் ரூ.7 ஆயிரம் கோடியில் மின் உற்பத்தி வாகன பூங்கா: அமைச்சர் கீர்த்தனா அறிவிப்பு

புதன் 26, ஆகஸ்ட் 2026 8:38:30 AM (IST)

Keerthana.jpg

தூத்துக்குடியில் ரூ.7 ஆயிரம் கோடியில் மின் உற்பத்தி வாகன பூங்கா உள்பட மொத்தம் 22 முக்கிய அறிவிப்புகளை சட்டசபையில் தொழிற்துறை மானியக் கோரிக்கையின் போது, அமைச்சர் கீர்த்தனா வெளியிட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் சில்லாநத்தம் பகுதியில் 1,294 ஏக்கர் பரப்பளவில் ரூ.7,000 கோடி முதலீடு மற்றும் 10,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் சிப்காட் சார்பில் மின் வாகன உற்பத்தித் தொழிற்பூங்கா அமைக்கப்படும்.

முடிவைத்தானேந்தல் சிப்காட் பூங்கா: முடிவைத்தானேந்தல் பகுதியில் ரூ.5,000 கோடி முதலீட்டை ஈர்த்து, 20,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 2,570 ஏக்கர் பரப்பளவில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா உருவாக்கப்படும்.

ஆயத்த தொழிற்கூட வசதிகள்: தூத்துக்குடி மற்றும் கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காக்களில் ரூ.224 கோடி மதிப்பில் பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் ஆயத்த தொழிற்கூடங்கள் அமைக்கப்படும்.

விழுப்புரம் (ஓமந்தூர்): ரூ.1,000 கோடி முதலீடு மற்றும் 3,200 வேலைவாய்ப்புகளுடன் 229 ஏக்கரில் தொழிற்பூங்கா.

நாமக்கல் (லத்துவாடி): ரூ.1,000 கோடி முதலீடு மற்றும் 3,500 வேலைவாய்ப்புகளுடன் 245 ஏக்கரில் தொழிற்பூங்கா.

புதுக்கோட்டை (திரப்பிடாங்கி): ஆவுடையார்கோவில் வட்டத்தில் ரூ.25 கோடி மதிப்பில் ஆயத்த தொழிற்கூட வசதியுடன் கூடிய சிறிய ஜவுளிப்பூங்கா.

மழைக்கால நிவாரண உயர்வு: உப்பளத் தொழிலாளர் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வரும் மழைக்கால நிவாரணத் தொகை ரூ.5,000-லிருந்து ரூ.7,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 23,000 குடும்பங்கள் பயனடைவர்.

வெற்றி மகளிர் திட்டம்: மகளிர் தொழில்முனைவோரை ஊக்குவிக்க ரூ.500 கோடி கடனுடவி வழங்கப்பட்டு, 3,500-க்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

சிவகாசி பைரோடெக்னிக்ஸ் மையம்: சிவகாசியில் பட்டாசு உற்பத்தியைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் ரூ.2 கோடி மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

டிஜிட்டல் மனை ஒதுக்கீடு: சிப்காட் தொழிற்பூங்காக்களில் மனைகள் ஒதுக்கீட்டை 100% வெளிப்படைத்தன்மையுடன் மாற்றவும், முப்பரிமாணக் (3D) காட்சிப்படுத்தலை வழங்கவும் டிஜிட்டல் தளம் உருவாக்கப்படும்.


மக்கள் கருத்து

Mariappan sea food exportAug 26, 2026 - 03:20:49 PM | Posted IP 162.1*****

Super Congratulations

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory