» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

முதல்வர் விஜய்யின் ஆட்சியைக் கவிழ்க்கப் பெரும் சதி: கோவில்பட்டியில் வைகோ குற்றச்சாட்டு

புதன் 26, ஆகஸ்ட் 2026 8:31:19 PM (IST)

vaiko43i34i32.jpg

தமிழக முதல்வர் விஜய்யின் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக ஆட்சியைக் கவிழ்க்கப் பெரும் சதி நடப்பதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

கோவில்பட்டியில் நடைபெற்ற மதிமுக வடக்கு மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ் என்பவரது மகனின் திருமண வரவேற்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியதாவது: "ஊழலை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்ற நன்னோக்கோடு முதல்வர் விஜய் தீவிரமாக முயற்சி செய்து வருகிறார். ஆனால், அரசுத்துறைகளில் கோடிக்கணக்கில் ஊழல் செய்த சில அதிகாரிகள், தவெக ஆட்சியை ஸ்தம்பிக்கச் செய்யும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர். 

அவர்கள் முக்கியமான கோப்புகளை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தாமல் முடக்கி வைக்கின்றனர். இத்தகைய செயல்பாடுகளில் ஈடுபடும் அதிகாரிகளைப் உடனடியாகப் பணியிலிருந்து விடுவித்துவிட்டு, அவர்களுக்குப் பதிலாக நேர்மையான அதிகாரிகளைப் பணியில் நியமிக்க வேண்டும்" என்றார்.


மக்கள் கருத்து

உண்மAug 27, 2026 - 10:07:14 AM | Posted IP 172.7*****

திமுக என்றால் லஞ்சம் ஊழல் எனத் தெரிந்ததும் , அங்கே கூட சேர்ந்து தின்னுட்டு வந்துட்டு பேச்சை பாருங்க பிச்சைக்கார அரசியல் புரோக்கர் பெட்டி கோபால் சைக்கோ.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory