» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழக உரிமைகளை அடகு வைத்த அதிமுகவுக்கு பாடம் புகட்ட வேண்டும்: உதயநிதி

செவ்வாய் 2, ஏப்ரல் 2024 4:30:02 PM (IST)மத்திய அரசிடம் தமிழக உரிமைகளை அடகு வைத்த அதிமுகவுக்கு தேர்தலில் பொதுமக்கள் பாடம் புகட்ட வேண்டும்' என அமைச்சர் உதயநிதி கூறினார்.

சென்னை மாதவரம் பகுதியில் வடசென்னை திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து அமைச்சர் உதயநிதி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது உதயநிதி பேசியதாவது: சசிகலா காலை பிடித்து முதல்வர் ஆன இ.பி.எஸ்., பின்னர் அவரது காலையே வாரிவிட்டார். அதானியின் நலனுக்காக நாடு நாடாகச் சுற்றும் நீங்கள் எங்கள் மீனவர்களின் நலனுக்காக எத்தனை முறை இலங்கைக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினீர்கள்.

லோக்சபா தேர்தலில் உதயசூரியனுக்கு அளிக்கும் ஒவ்வொரு ஓட்டும் பிரதமர் மோடிக்கு வைக்கும் வேட்டு. மத்திய அரசிடம் தமிழக உரிமைகளை அடகு வைத்த அதிமுக அரசுக்கு இந்த தேர்தலில் பொதுமக்கள் பாடம் புகட்ட வேண்டும். அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் கலாநிதி வீராசாமியை வெற்றி பெறச் செய்ய வேண்டும். கலாநிதி வீராசாமியை எதிர்த்து போட்டியிடுபவர்களை டெபாசிட் இழக்கச் செய்யவேண்டும்.

வட சென்னை அனல் மின் நிலையத்தில் ரூ.6,300 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேர்தல் முடிந்ததும் வீட்டுமனை பெற்றவர்களுக்கு பட்டா வழங்கப்படும். சட்டசபை தேர்தலில், ஒட்டுமொத்த சென்னையும், திமுகவுக்கு ஓட்டளித்தது. கருணாநிதியை போலவே, சொன்னதை தான் செய்வார், செய்வதை தான் சொல்வார் முதல்வர் ஸ்டாலின். வட சென்னை கணேசபுரத்தில் ரயில்வே மேம்பால பணிகள் விரைவில் முடிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory