» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நாகர்கோவில் தொகுதியில் விஜய் வசந்த் தீவிர வாக்கு சேகரிப்பு
புதன் 3, ஏப்ரல் 2024 8:05:48 PM (IST)
நாகர்கோவில் தொகுதியில் கன்னியாகுமரி பாராளுமன்ற வேட்பாளர் விஜய் வசந்த் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
நாகர்கோவில் தொகுதி இந்தியா கூட்டணியின் கன்னியாகுமரி பாராளுமன்ற வேட்பாளர் விஜய் வசந்த், குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர் ரெ.மகேஷ் உடன் பார்வதிபுரம் கற்பக விநாயகர் கோயில் மற்றும் முத்தாரம்மன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த பின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் வாகனத்தில் கை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பினை துவங்கினார். இதில் இந்தியா கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.