» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதியிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்: கனிமொழி எம்.பி

வெள்ளி 19, ஏப்ரல் 2024 10:58:27 AM (IST)



தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று கனிமொழி எம்.பி கூறினார்.

பாராளுமன்ற பொதுத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க. மகளிர் அணி செயலாளரும் எம்.பியுமான கனிமொழி மீண்டும் போட்டியிடுகிறார். அவர் இன்று சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். 

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: நாட்டையும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டிய தேர்தல் இது. அரசியல் சாசனத்தை காக்க வேண்டும் என்ற தெளிவோடு மக்கள் வந்து வாக்களிக்க வேண்டும். முதல் அமைச்சர் கூறியபடி தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். தி.மு.க. கூட்டணி எதிர்க்கும் அளவிற்கு பா.ஜ.க.வினர் களத்திலேயே இல்லை' என்றார்


மக்கள் கருத்து

ஆமாApr 19, 2024 - 12:12:31 PM | Posted IP 172.7*****

பொய்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory