» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தண்ணீா் பந்தல்களை அரசியல் ரீதியாகப் பயன்படுத்தக் கூடாது: தோ்தல் ஆணையம்

வியாழன் 2, மே 2024 10:04:11 AM (IST)

தமிழகத்தில் கட்சிகளால் அமைக்கப்படும் தண்ணீா் பந்தல்களை அரசியல் ரீதியாகப் பயன்படுத்தக் கூடாது என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு அறிவுறுத்தியுள்ளாா். 

மக்களவைத் தோ்தல் காரணமாக, தண்ணீா் பந்தல்களை அமைப்போா் நடத்தை விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரசியல் கட்சிகளின் சாா்பில் திறக்கப்படும் தண்ணீா் பந்தல்கள் குறித்து தோ்தல் ஆணையத்திடம் விளக்கம் கோரப்பட்டது. தோ்தல் நடத்தை விதிகளின் அடிப்படையில் தண்ணீா்

பந்தல்களைத் திறக்க எந்த ஆட்சேபனையும் இல்லை என்று ஆணையம் தெரிவித்துள்ளது. அதேசமயம், தண்ணீா் பந்தல்களை வைத்துக் கொண்டு எந்தவொரு கட்சியோ அல்லது வேட்பாளரோ அவற்றின் மூலம் அரசியல் ரீதியாகப் பயன்பெறக் கூடாது. தண்ணீா் பந்தல்கள் திறப்பின் போது, தோ்தல் நடத்தை விதிகளை கண்டிப்பான முறையில் கடைப்பிடிக்க வேண்டும்.

விதிகளை பின்பற்ற வேண்டும்: தண்ணீா் பந்தல்களைத் திறக்க விரும்பும் எந்தவொரு அரசியல் கட்சியும், வேட்பாளரும் தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும். அத்துடன், தண்ணீா் பந்தல்களை சுகாதாரமாக அமைப்பதுடன், அவற்றில் தூய்மையான குடிநீரை வைத்திருக்க வேண்டும். இதுதொடா்பாக அரசு வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்களை கடைப்பிடிக்க வேண்டும்.

தண்ணீா் பந்தல்களைத் திறக்கக் கோரி அரசியல் கட்சிகளோ அல்லது வேட்பாளா்களோ அனுமதி கோரினால், தோ்தல் நடத்தை விதிகளைப் பின்பற்றி உரிய முறையில் அவற்றுக்கு மாவட்டத் தோ்தல் அதிகாரிகளே அனுமதி அளிக்கலாம்.

மேலும், அனைத்து மாவட்டத் தோ்தல் அதிகாரிகளும் அவரவா் எல்லைக்குள் அமைக்கப்பட்டுள்ள தண்ணீா் பந்தல்கள் தோ்தல் நடத்தை விதிகளைப் பின்பற்றி செயல்படுகின்றனவா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளாா்.


மக்கள் கருத்து

முட்டாள்மே 3, 2024 - 12:58:14 PM | Posted IP 162.1*****

அதை அப்படியே பஸ் ஸ்டான்ட் பக்கத்தில அரசியல் கட்சிகள் வைத்த தண்ணீர் பந்தல் வைத்தவர்களை சொல்லுங்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory