» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடியில் 36 பவுன் நகை கொள்ளை வழக்கில் 6பேர் கைது: நகைகள் மீட்பு!

வியாழன் 2, மே 2024 11:45:42 AM (IST)

தூத்துக்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து 36 பவுன் நகைகளை கொள்ளையடித்த சம்பவத்தில் 2 சிறார்கள் உட்பட 6பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

தூத்துக்குடி அய்யயாசாமி காலனியைச் சேர்ந்தவர் அசரியா மனைவி எஸ்தர் (52). இவர் கடந்த 26 ஆம் தேதி கோயமுத்தூரில் உள்ள உறவினர் திருமண நிகழ்ச்சிக்காக வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கோயமுத்தூர் சென்றுவிட்டு நேற்று காலை ஊர் திரும்பினார். அப்போது அவரது வீட்டில் உள்ள கதவில் பூட்டுகள் உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 36 பவுன் நகைகள் திருடு போயிருந்தது. இதன் மதிப்பு 13 லட்சம் ஆகும். 

இதுகுறித்து எஸ்தர் சிப்காட் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்நிலையில் இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சேகர் மகன் சந்திரன் (20), தேவராஜ் மகன் சந்தோஷ்குமார் (21), சந்திரன் மகன் அருள் ராஜ் (19), மேட்டுப்பட்டி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த ஆரோக்கியம் மகன் ஹரிபிரகாஷ் (23), மற்றும் 2 இளம் சிறார்கள் உட்பட 6பேரை போலீசார் கைது செய்து திருடப்பட்ட நகைகளை பறிமுதல் செய்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory