» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அண்ணாமலை மீது வழக்கு தொடர தமிழக அரசு அனுமதி

ஞாயிறு 12, மே 2024 8:38:35 PM (IST)

அண்ணாதுரை, முத்துராமலிங்க தேவரை பற்றி அவதுறாக பேசிய புகாரில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அண்ணாதுரை, முத்துராமலிங்க தேவரை பற்றி அவதுறாக பேசிய புகாரில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். சேலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு தொடர சேலம் மாவட்ட கலெக்டர் அனுமதி கோரிய நிலையில், தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 3 ஆண்டுகளில், திமுக அரசு என் மீதும், எங்கள் பா.ஜ., நிர்வாகிகள் மீதும் உண்மையைப் பேசியதற்காக ஏராளமான வழக்குகளைத் தொடுத்துள்ளது. தற்போது என் மீது வழக்குத் தொடர அனுமதி வழங்கியது.

என் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் நான் பேசுவதை யாராலும் தடுக்க முடியாது. உண்மையை பேசியதற்காக என் மீது வழக்கு போடுகின்றனர். போதைப்பொருள் வியாபாரிக்கு கட்சியில் பொறுப்பு வழங்கிய திமுகவின் உண்மைநிலை மக்களுக்கு தெரியும். இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory