» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கண் லென்ஸ் பொருத்தும் சிறப்பு முகாம் : ஆட்சியர் ஸ்ரீதர் அழைப்பு
வியாழன் 11, ஜூலை 2024 12:08:14 PM (IST)
குமரி மாவட்டத்தில் கண்புரை நோயாளர்களுக்கு கண் லென்ஸ் பொருத்தும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என்று ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "கண்புரை நோயாளருக்கான சிகிச்சை முறைகள் மிக வேகமாக முன்னேற்றமடைந்து கொண்டிருக்கிறது. முந்தைய காலங்களில் கையாண்ட கண்புரை அறுவை சிகிச்சை முறைகள் தற்போது செய்யப்படுவதில்லை. அதற்கு பதிலாக அதிநவீன முறையிலான மற்றும் பழைய முறையை விட மிகவும் மேம்படுத்தப்பட்ட "கண் லென்ஸ்” பொருத்தும் சிகிச்சையே கண்புரை நோயாளர்களுக்கு தற்பொது செய்யப்பட்டு வருகிறது.
இம்முறையில் கண்புரை நோயாளரின் கண்களில் உள்ள பழுதுபட்ட லென்ஸ்களுக்கு பதிலாக புதிதான வேறொரு லென்ஸ் மிகவும் எளிதான முறையில் பொருத்தப்படுவதால் கண்புரை நோயாளர்களுக்கு கீழ்கண்ட பயன்கள் ஏற்படுகிறது.
பார்வையானது மிக தெளிவாகவும் மிக நேர்த்தியாகவும் கிடைக்கிறது. புதிய லென்ஸ் பொருத்தப்படுவதால் மிக நீண்ட நாட்கள் பார்வை தெளிவாக இருக்கிறது. மிக கனமான கண்ணாடி அணிய தேவையில்லை.
மிக குறுகிய காலத்திலேயே (ஒரு வாரத்தில்) நமது இயல்பான பணிகளை செய்ய முடியும். மேலும் "கண் லென்ஸ்” பொருத்தும் கிசிச்சையின் முக்கியத்துவத்தை மக்கள் அறிந்து கொள்ளவும் அதன் முழு பயனையும் கண்புரை நோயாளர்கள் பெறுவதற்காக ஒவ்வொரு ஊராட்சிகளிலும் கீழ்கண்ட தேதிகளில் "கண் லென்ஸ் பொருத்தும் முகாம்” மூலம் நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் நடைபெற உள்ளது.
அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்தில் 19.07.2024 அன்று ஆர்.சி. சர்ச் அமராவதிவிளை மற்றும் படிப்பகம் குலசேகரபுரத்திலும் நடைபெற உள்ளது. தோவாளை ஊராட்சி ஒன்றியத்தில் 11.07.2024 அன்று சத்துணவு மையம் குருக்கள் மடம்ö அரசு துணை சுகாதார நிலையம் இறச்சகுளம் மற்றும் தாழாக்குடி அரசு துணை சுகாதார நிலையத்திலும் நடைபெற உள்ளது.
இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் 12.07.2024 அன்று கலையரங்கம் அம்மச்சியார்விளை மற்றும் ஆர்.சி. சர்ச் பள்ளத்திலும் நடைபெற உள்ளது. குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்தில் 13.07.2024 அன்று ஆர்.சி. சர்ச் மணவிளை மற்றும் ஆர்.சி. சர்ச் முட்டத்தில் வைத்து நடைபெற உள்ளது.
தக்கலை ஊராட்சி ஒன்றியத்தில் 25.07.2024 அன்று அரசு துணை சுகாதார நிலையம் கண்டன்விளை மற்றும் 26.07.2024 அன்று பள்ளியாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் நடைபெற உள்ளது. திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்தில் 29.07.2024 அன்று கண்ணணூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற உள்ளது
கிள்ளிêர் ஊராட்சி ஒன்றியத்தில் 26.07.2024 அன்று திப்பிரமலை அரசு துணை சுகாதார நிலையத்தில் நடைபெற உள்ளது. மேல்புரம் ஊராட்சி ஒன்றியத்தில் 29.07.2024 அன்று வெள்ளாங்கோடு அரசு துணை சுகாதார நிலையத்தில் நடைபெற உள்ளது. முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்தில் 25.07.2024 அன்று தூத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் கொல்லங்கொடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் நடைபெற உள்ளது
இந்த முகாம்களில் கலந்து கொள்ளும் அனைத்து கண்புரை நோயாளர்களையும் அரசு வாகனத்தில் அழைத்து வந்து இலவசமாக கண் லென்ஸ் பொருத்தும் சிகிச்சை மேற்கொள்ளப்படும். எனவே கண்புரை நோயாளர்கள் இவ்வறிய வாய்ப்பினை பயன்படுத்தி இந்த நவீன கண் லென்ஸ் பொருத்தும் சிகிச்சையை மேற்கொண்டு நமது கன்னயாகுமரி மாவட்டத்தில் கண்புரை நோயுற்றோர் அனைவரும் பார்வை அடைந்துள்ளனர் என்ற நிலையை ஏற்படுத்துமாறு இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், கேட்டுக்கொள்கிறார்,