» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

உயிர்க்கொல்லி ஆசிட் ஆலையை இழுத்து மூடக்கோரி போராட்டம் : 113பேர் கைது!

வியாழன் 11, ஜூலை 2024 3:37:44 PM (IST)



அணஞ்சான்விளையில் உயிர்க்கொல்லி ஆசிட் தொழிற்சாலையை இழுத்து மூடக்கோரி  உண்ணாவிரத போராட்டம் நடத்த 113பேரை போலீசார் கைது செய்தனர். 

குமரி மாவட்டம், திருவட்டார் தாலுகா, ஆற்றூர் பேரூராட்சிக்குட்பட்ட அணஞ்சான்விளையில் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புக்கு நடுவே பாத்திர ஆசிட் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது இதனால் அந்தப் பகுதியில் கேன்சர் நோயினால் உயிரிழப்புகள் தொடர்ச்சியாக ஏற்பட்டு வருகிறது. 

இது சம்பந்தமாக கடந்த 13-06-2024 அன்று குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியும் மாசு கட்டுப்பாட்டு வாரியமும், குமரி மாவட்ட சுகாதாரத்துறையும் ஆலையை இழுத்து மூட உத்தரவிட்டும் இதுவரையில் மேற்படி உயிர்க்கொல்லி ஆசிட் தொழிற்சாலை இழுத்து மூடப்படவில்லை, ஆத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் மேற்படி உயிர்க்கொல்லி ஆலை உரிமையாளரிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு உயிர் கொல்லி ஆலைக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். 

இதை கண்டித்தும் உடனடியாக உயிர்க்கொல்லி ஆசிட் தொழிற்சாலையை இழுத்து மூடக்கோரியும் தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் இன்று ஆற்றூர் பேரூராட்சி அலுவலகம் முன்பதாக தீர்வு கிடைக்கும் வரை சாகா சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியது. ஆனால் காவல்துறை உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுத்து 113-பேரை காவல்துறை கைது செய்து  திருவட்டார் காவல் நிலையம் எதிரில் தனியார் திருமண மண்டபத்தில் சிறை வைத்துள்ளனர்.

100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதால் அந்தப் பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. மேற்படி உயிர்கொல்லி ஆலையை இழுத்து மூட வலியுறுத்தி வரும் 25-07-2024 அன்று குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் அறிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory