» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: மேலும் 3பேர் கைது!

வெள்ளி 12, ஜூலை 2024 11:45:50 AM (IST)

பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 3 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில், இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டு போலிஸ் காவலில் வைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ் நரேஷ், சீனிவாசன் என மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட அருள் என்பவரின் செல்போன் எண்ணில் இருந்த எண்களை விசாரணை நடத்தியும், பெரம்பூர் பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றியும் விசாரணை நடத்தி வந்த நிலையில், இந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவா் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ஆம் தேதி சென்னை பெரம்பூா் பந்தா்காா்டன் பகுதியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக செம்பியம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ரௌடி ஆற்காடு சுரேஷின் சகோதரரான ராணிப்பேட்டை மாவட்டம், காட்பாடி பகுதியைச் சோ்ந்த பொன்னை பாலு, அவரது கூட்டாளிகளான சந்தோஷ், திருமலை, மணிவண்ணன், குன்றத்தூா் திருவேங்கடம், திருநின்றவூா் ராமு என்ற வினோத், அருள், செல்வராஜ், சிவசக்தி, கோகுல், விஜய் ஆகிய 11 பேரைக் கைது செய்தனா்.

கைதான 11 பேரையும் 7 நாள்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என செம்பியம் காவல் ஆய்வாளா் எழும்பூா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், இவர்களை 5 நாள்கள் போலிஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது. இந்த நிலையில், கொலை வழக்கில் மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory