» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆன்மிக சுற்றுலா என்ற பெயரில் மோசடி: 100க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்!

வெள்ளி 12, ஜூலை 2024 11:59:00 AM (IST)

மதுரை விமான நிலையத்தில் போலி டிக்கெட்டுகளுடன் வந்த நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் வெளியேற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையிலிருந்து அயோத்திக்கு சுற்றுலா செல்வதற்காக தனியார் விமானத்தில் முன்பதிவு செய்த நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் இன்று காலையில் மதுரை விமான நிலையம் வந்தனர். பாதுகாப்பு சோதனை முடிந்து அவர்கள் விமான நிலையத்திற்குள் சென்ற நிலையில், அங்கு அவர்களது டிக்கெட்டுகளை பரிசோதித்த தனியார் விமான நிறுவன அதிகாரிகள் அவ்வாறு எதுவும் புக்கிங் செய்யவில்லை என்றும் அந்த டிக்கெட்டுகள் போலியானது என்றும் தெரிவித்தனர்.

இதையடுத்து போலி விமான டிக்கெட்டுகளுடன் வந்த நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் விமான நிலையத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து அந்த பயணிகள் தங்களுக்கு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த ஏஜென்ட்-ஐ தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் "நான் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யவில்லை, எனக்கு தெரிந்த ஒருவரிடம் சொல்லி செய்தேன். உடனடியாக இதுகுறித்து அவரிடம் விசாரித்து வேறு டிக்கெட் ஏற்பாடு செய்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்வதாக கூறி 106 பேரிடம் தலா ரூ.29 ஆயிரம் வசூலித்து மோசடி நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது. அயோத்தி செல்ல மதுரை விமான நிலையம் வந்தவர்களிடம், டிக்கெட் எதுவும் புக் செய்யப்படவில்லை என இண்டிகோ ஊழியர்கள் கூறியதால் ஆன்மிக சுற்றுலா செல்ல வந்தவர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர். சுமார் ரூ.26 லட்சத்திற்கு மோசடி செய்யப்பட்ட சம்பவம் குறித்து புகார் அளிக்க பாதிக்கப்பட்டவர்கள் முடிவு செய்துள்ளனர்.

போலி டிக்கெட் வைத்திருந்ததாக நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் வெளியேற்றப்பட்ட சம்பவம் மதுரை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory