» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கருணாநிதி பற்றி அவதூறு கருத்து: சீமான் மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்
வெள்ளி 12, ஜூலை 2024 12:20:59 PM (IST)
சீமான் மீது வன்கொடுமை தடுப்பு மற்றும் குண்டர்கள் தடுப்பு சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
எழும்பூரைச் சேர்ந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர் நடராஜன் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நாம் தமிழர் நிர்வாகி சாட்டை துரைமுருகனை கைது செய்ததற்கு எதிராக அக்கட்சி தலைவர் சீமான் தனியார் தொலைகாட்சிகளுக்கு அளித்த பேட்டியில் முன்னாள் முதல்வரும் உலக தமிழர்களின் தலைவரும் தி.மு.க. தலைவருமாக இருந்து மறைந்த தமிழினத் தலைவர் முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் கருணாநிதியை தமிழக மக்களே கொந்தளிக்கும் வகையில் அவதூறாக பேசியுள்ளார்.
'கள்ளத்தனம் செய்த காதகன், கள்ளத்தனம் கொண்ட சதிகாரன் கருணாநிதி, சண்டாளன், துரோகி, இறை தூதுவரா, இறை மகன் ஏசுவா என்றும், கிருஷ்ண பரமாத்வா' என்றும் பேசி வன்முறையை தூண்டிவிட்டுள்ளதையும் மிகவும் அவதுாறாக பேசியதையும் தமிழக மக்கள் மிகவும் வன்மையாக கண்டித்து வருகின்றனர்.
மேலும் சீமான் தன்னுடைய திரைப்படமான 'தம்பி' என்ற படத்தில் ஒரு வசனமாக 'சண்டாளன்' என்று பேசியதற்கு பகிங்கரமாக மன்னிப்பு கேட்டிருந்தார். இருந்தபோதிலும் 'சண்டாளன்'என்ற வார்த்தை ஒதுக்கப்பட்ட பட்டியலினத்தை சேர்ந்த ஒரு ஜாதியை சேர்ந்த மக்களை குறிப்பிடுவதாகும். மற்றவர்களை இழிவுப்படுத்தும் நிலையில் அதை தெரிந்தும் இதுபோன்று ஒடுக்கப்பட்ட பட்டியலின மக்களை தொடர்ந்து அவர்களது சாதியை இழிவாகவே பேசிவருகின்றார்.
அவர் ஏற்கனவே அந்த சமூகத்தினரை பற்றி பேசி பொது மன்னிப்பு கேட்டு விட்டு தற்போதும் அந்த ஒரு குறிப்பிட்ட ஒடுக்கப்பட்ட பட்டியலின சாதியை (சண்டாளர்) சேர்ந்த சமூகத்தினரை தொடர்ந்து இழிவுப்படுத்தி பேசி உள்ளார். எனவே நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் மீது வன்கொடுமை தடுப்பு மற்றும் அவதூறு பேச்சிற்கு எதிரான சட்டப்படியான குண்டர்கள் தடுப்பு சட்டத்தின்படியும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
அப்படினா ?Jul 13, 2024 - 03:33:05 PM | Posted IP 162.1*****
தமிழினத் தலைவர் முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் கருணாநிதி அப்படினா என்ன ??
truthJul 14, 2024 - 05:42:21 AM | Posted IP 162.1*****