» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சீமான் மனநிலையை பரிசோதிக்க வேண்டும் : அமைச்சர் கீதாஜீவன் பேட்டி!

வெள்ளி 12, ஜூலை 2024 1:05:42 PM (IST)

கலைஞர் பற்றி அரை வேக்காட்டுத் தனமாக பேசும் சீமானின் மனநிலையை பரிசோதிக்க வேண்டும் என்று அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், "கலைஞர் கருணாநிதி பற்றி அவதூறான கருத்துக்களை சீமான் தெரிவித்து வருகிறார். கலைஞர் பற்றி தமிழ் மக்கள் அறிவர். கலைஞர், தமிழ்நாடு மக்களுக்காக தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும் பணியாற்றியவர். தமிழ் மொழியை செம்மொழி ஆக்கியவர். 

மகளிர், திருநங்கைகள், மாற்றுத்திறானிகள் உள்ளிட்ட அனைவருக்கும் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தவர். இளைஞர்களுக்காக கல்விக்கடன் ரத்து, கணினி வழங்கும் திட்டம், முதல் பட்டதாரி திட்டம் உட்பட பல திட்டங்களை  தந்தவர். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு வித்திட்டவர் கலைஞர். அவரை அவதூறாக பேசுவது கண்டிக்கத்தக்கது. 

நாம் தமிழர் கட்சியினர் கலைஞரை அவதூறாக பேசுவதை கண்டிக்காமல் சீமான் சிரித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு தலைவருக்குரிய பண்பு இல்லை. கலைஞரின் மறைவின் போது அவரை புகழ்ந்து பேசியவர் தற்போது மாற்றி பேசுகிறார். தமிழக முதல்வர், கழகத் தலைவரின் கட்டளைக்கு கட்டுப்பட்டு எங்கள் கட்சியினர் பொறுமையாக உள்ளனர். அரசியல் ரீதியாக குற்றச்சாட்டுக்கள் கூறும்போது நாங்கள் எந்த புகாரும் அளிக்கவில்லை. 

தற்போது சாதி ரீதியாக பேசியதாக துரை முருகன் மீது அருண் என்பவர் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சீமான் காெள்கை இல்லாதவர். வாய்க்கு வந்ததை பேசுகிறார். சட்டம் ஒழுங்கில் பிர்சசனை ஏற்படுத்த முயன்று வருகிறார். ஏற்கனவே கிறிஸ்தவர்கள், முஸ்லீம்களை சாத்தான்களின் பிள்ளைகள் என்று கூறியவர். ஈரோட்டில் தூய்மைப் பணியாளர்களை சாதிரீ ரியாக  இழிவு படுத்தி அவதூறாக பேசியவர். 

அரை வேக்காட்டுத் தனமாக தினமும் ஒரு கருத்துக்களை தெரிவிக்கிறார். அவரது மனநிலையை சோதிக்க வேண்டும். சவுக்கு சங்கர், பெலிக்ஸ் கைது குறித்து கேள்வி கேட்கிறார். பெண் காவலர்கள் புகார் மீது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. பெண் காவலர்களை அவதூறாக பேசியதை அவர் ஆதரிக்கிறாரா? கருத்துரிமை பறிக்கப்படுவதாக பேசுகிறார். 

தனிப்பட்ட முறையில் தவறாக பேசுவதை ஏற்க முடியாது. அவர் தவறான தகவல்களை தெரிவித்து தமிழ் சமூகத்தை தவறாக வழிநடத்துகிறார். இலங்கை தமிழர் பிரச்சனையை முன்நிறுத்தி உலக அளவில் அவர் நிதி பெற்று வருகிறார் என்பது அனைவருக்கும் தெரியும். ராஜபக்சேவை போல திமுகவையும், அதன் தலைவர்களையும் தமிழர்களின் விரோதியாக சித்தரித்து அவதூறாக பேசி வருகிறார். சீமான் நாக்கை அடக்கி வாசிக்க வேண்டும் என்றார். 


மக்கள் கருத்து

என்னமா இப்படி பண்றீங்களேJul 13, 2024 - 11:27:51 AM | Posted IP 172.7*****

முத்தையாபுரம் பகுதி திமுக வா? அது பூரா திருட்டு பயலுக வாழும் இடமாச்சே. முத்தையாபுரம் காவல் நிலையங்களில் நிறைய திருட்டு குற்ற வழக்குகள் உள்ளது. ஹோ ஹோ

திமுக குசு குமாரன் அவர்களுக்குJul 12, 2024 - 07:56:37 PM | Posted IP 162.1*****

அது எப்படி தமிழினத் தலைவர்? பிறந்த ஊரு ஓங்கோல், அந்திராவில் அதுக்கு பெயர் தமிழின தலைவராம். 🤣🤣🤣

திமுக சு குமரன்Jul 12, 2024 - 07:01:13 PM | Posted IP 172.7*****

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களை அவதூறாக பேசிய சீமான் அவர்களுக்கு எங்கள் முத்தையா வரும் பகுதியின் சார்பாக கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்... என்றும் எங்கள் தமிழினத் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வழியில்... முத்தையாபுரம் பகுதி திமுக.🏴🚩🙏

தமிழ்ச்செல்வன்Jul 12, 2024 - 06:00:26 PM | Posted IP 172.7*****

கருணாநிதியைப் பற்றி.... பெரியார் பேசாத பேச்சா? கண்ணதாசன் பேசாத பேச்சா? எம்ஜிஆர் பேசாத பேச்சா? ஜெயலலிதா பேசாத பேச்சா? நாஞ்சில் சம்பத் பேசாத பேச்சா? நாஞ்சில் மனோகரன் பேசாத பேச்சா? தீப்பொறி ஆறுமுகம் கொஞ்சநாள் ஆதீமூக்காவுல இருந்து எம்ஜிஆர் பேசாத பேச்சா? வைகோ பேசாத பேச்சா? இப்ப சீமான் பேசுனா மட்டும் இடிக்குதோ? சரி.... பதவியை காப்பாத்த நீங்க இப்படி பேசித்தானே ஆகணும்...

தமிழர் தலைமைJul 12, 2024 - 05:21:01 PM | Posted IP 162.1*****

வழக்கம்போல திராவிடம் ஜாதிக்கு எதிராக ஜாதியை தூண்டி விடுகிறது. சீமானும் நாடார் கீதா ஜீவனும் நாடார். இதுதான் திராவிட சூட்சி. தமிழர் ஜாதிகளை தங்கள் ஜாதிக்குள்ளே பிரித்து ஆள்வது.

தேச பக்தன் காமராஜர் பக்தர் ஒருவன்Jul 12, 2024 - 02:56:13 PM | Posted IP 162.1*****

கருணாநிதி நம் தலைவர் கல்வித்தந்தை காமராஜரை எதிராக பேசினார் தெரியுமா ? அண்டங்காக்கா, காண்டாமிருகத் தோழர் , மரமேறி , பனையேறி ,.. என்று ஒருமையில் வசைபாடியது என்பது எல்லோருக்கும் தெரியும். கடவுளுக்கே தெரியும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory