» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அமைச்சர் துரைமுருகன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி
சனி 13, ஜூலை 2024 5:08:26 PM (IST)
அமைச்சர் துரைமுருகன் உடல்நலக் குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் அ.சிவா வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து திமுகவினர் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். திமுக மூத்த தலைவர்கள் பலரும் திமுக தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வந்திருந்து வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.இந்த நிலையில், அறிவாலயத்திற்கு வருகை தந்த அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர் சிகிச்சைக்காக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள துரைமுருகனுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கருத்து வேறுபாடு என்பது ஜனநாயக உரிமை: சவுக்கு சங்கர் ஜாமின் வழக்கில் நீதிபதிகள் கருத்து
வெள்ளி 26, டிசம்பர் 2025 8:56:12 PM (IST)

பராசக்தி திரைப்படத்திற்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்!!
வெள்ளி 26, டிசம்பர் 2025 4:55:03 PM (IST)

மத்திய அரசின் தரவரிசைகளில் தமிழ்நாடு நம்பர் 1: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!
வெள்ளி 26, டிசம்பர் 2025 4:48:40 PM (IST)

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் போக்குவரத்து விதிமீறல்: 156 வாகனங்கள் பறிமுதல்!
வெள்ளி 26, டிசம்பர் 2025 4:28:21 PM (IST)

மணக்குடி கிராமத்தில் சுனாமி நினைவு தினம்: கல்லறை தோட்டத்தில் மீனவர்கள் அஞ்சலி!
வெள்ளி 26, டிசம்பர் 2025 12:14:46 PM (IST)

இடியாப்பம் விற்க உரிமம் அவசியம் : தமிழக உணவு பாதுகாப்புத் துறை உத்தரவு
வெள்ளி 26, டிசம்பர் 2025 12:03:09 PM (IST)

