» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் 47வது முறையாக நீட்டிப்பு!

செவ்வாய் 16, ஜூலை 2024 5:38:32 PM (IST)

செந்தில் பாலாஜியின்  நீதிமன்ற காவல் 47வது முறையாக ஜூலை 18ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

சட்ட விரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக வங்கியின் கணக்கு தொடர்பாக ஆவணங்களை கேட்டு அமலாக்கத்துறை வங்கிக்கு அனுப்பிய கடிதத்தை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவை ஏற்றுக் கொண்ட சென்னை அமர்வு நீதிமன்றம் நீதிபதி அல்லி அந்த ஆவணங்களை வழங்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டிருந்தார். இந்த ஆவணங்களை பெறுவதற்காக செந்தில் பாலாஜியை இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் படுத்தும்படி சிறைத்துறைக்கு நீதிபதி உத்தரவிடிருந்தார். இதன் அடிப்படையில் செந்தில் பாலாஜி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அல்லி முன்பு ஆஜர் படுத்தப்பட்டார். 

அவருக்கு அந்த வங்கி சம்பந்தப்பட்ட ஆவணங்கள் வழங்கப்பட்டது. பின்னர் இந்த வழக்கின் விசாரணையானது ஜூலை 18ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றைக்கு முடிவடைந்ததையடுத்து, அவரது நீதிமன்ற காவலையும் ஜூலை 18ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்மூலமாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்படிருப்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory