» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

காவல் நிலையத்தில் விஷம் குடித்த வியாபாரி : தூத்துக்குடியில் பரபரப்பு!

செவ்வாய் 16, ஜூலை 2024 8:05:14 PM (IST)

தூத்துக்குடி காவல் நிலையத்தில் சமாதான பேச்சு வார்த்தை நடந்தபோது திடீரென இன்ஸ்பெக்டர் முன்னிலையில் விஷம் குடித்த வடை வியாபாரி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி பால விநாயகர் கோவில் தெருவில் ஆவுடையார்புரம் அமைந்து உள்ளது. இந்த பகுதியில் சுமார் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வந்தனர். இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள இடத்தை, தூத்துக்குடியைச் சேர்ந்த தனியார் ஒருவர் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் அவர், அந்த பகுதியில் உள்ள பொதுமக்களை வீடுகளை காலி செய்ய வலியுறுத்தி வந்தாராம். 

தற்போது, 17 குடும்பத்தினர் அங்கு வசித்து வருவதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து இடப்பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ராஜாராம் தலைமையில் நடந்தது. 

கூட்டத்தில் கலந்து கொண்ட, வடை வியாபாரம் செய்யும் ஜான் மகன் அன்புராஜ் (45), என்பவர் "நாங்கள் ஆண்டாண்டு காலமாக குடியிருந்து வரும் வீடுகளை எப்படி காலி செய்ய முடியும் எங்களுக்கு எங்கு சென்றாலும் நியாயம் கிடைக்கவில்லை. எங்களை காலி செய்வதிலே குறியாக உள்ளனர். இதற்கு அனைத்து அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர் என்று கூறி திடீரென தனது பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த விஷத்தை எடுத்து குடித்தார்.

உடனடியாக அவர் மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் அவரை உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் சமாதான பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து

MAKKALJul 18, 2024 - 05:41:41 PM | Posted IP 172.7*****

HYPER

செய்தி வாசிப்பவர்Jul 18, 2024 - 01:12:09 PM | Posted IP 162.1*****

"தூத்துக்குடியைச் சேர்ந்த தனியார் ஒருவர்" அப்படினா என்ன ? எங்ககிட்ட முட்டாளாக நினைக்கிறீங்களா? அந்த ஆளு பெயர் ஒழுங்கா போடுங்க, இல்லேனா அல்லது தெரியவில்லைனா செய்தி போடாமல் இருங்க .

tutyJul 17, 2024 - 11:14:55 AM | Posted IP 162.1*****

taniyar ah politician ah

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory