» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தொடக்கப்பள்ளிகளில் ஆட்சியர் ஆர்.அழகுமீனா திடீர் ஆய்வு!

செவ்வாய் 23, ஜூலை 2024 11:39:46 AM (IST)



கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடக்கப்பள்ளிகளில் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா திடீர் ஆய்வு மேற்கொண்டார். 

கன்னியாகுமரி மாவட்ட மகளிர் திட்டம் மற்றும் சத்துணவு துறையின் கீழ் தொடக்கப்பள்ளி மாணவ மாணவியர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு வழங்கப்படுவது குறித்து, மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இன்று (23.07.2024) நுள்ளிவிளை ஊராட்சிக்குட்பட்ட பேயன்குழி அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் கல்குறிச்சி அரசு உதவி பெறும் பள்ளியான புனித ஜோசப் நடுநிலைப்பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு வழங்கப்படுவதை திடீர் ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-
 
தமிழ்நாடு முதலமைச்சர் அரசுப்பள்ளிகளில் பயிலும் சிறார்களுக்கு காலை உணவு வழங்குவது குறித்த தொலைநோக்கு பார்வையுடன் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தினை அறிவித்து, அத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். மேலும் இத்திட்டத்தினை விரிவுப்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளான கடந்த 15.07.2024 அன்று தமிழ்நாட்டின் ஊரக பகுதிகளில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி மாணவ மாணவியர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தினை துவக்கி வைத்தார்கள்.

அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டம் நுள்ளிவிளை ஊராட்சிக்குட்பட்ட பேயன்குழி அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் கல்குறிச்சி அரசு உதவி பெறும் பள்ளியான புனித ஜோசப் நடுநிலைப்பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு வழங்கப்படுவது குறித்து, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் ஆரோக்கியமான வருங்கால சந்ததியினரை உருவாக்கிடவும், குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டினை நீக்கி, அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியரின் பள்ளி வருகையை அதிகரித்திடும் விதமாகவும் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசுபள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் ஊரக பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளி மாணவ மாணவியர்களுக்கும் அனைத்து பணி நாட்களிலும் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தினை மாணவ மாணவியர்கள் நன்கு பயன்படுத்தி உடல் ஆரோக்கியத்துடன் கல்வி பயின்று வாழ்வில் ஏற்றம் பெற வேண்டுமென கேட்டுக்கொள்வதோடு, துறை அலுவலர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து சிறப்பு திட்டங்களையும் பொதுமக்கள், மாணவ மாணவியர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் எடுத்துக்கூற வேண்டுமென ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார்.

முன்னதாக மாவட்ட ஆட்சியர் தொடக்கப்பள்ளி மாணவ மாணவியர்களுக்கு காலை உணவு வழங்கி, உணவின் தரம் குறித்து மாணவ மாணவியர்களிடம் கேட்டறிந்து, மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்பட்ட காலை உணவினை உண்டு மகிழ்ந்தார்கள். மேலும் காலை உணவு தயாரிக்கும் சமையல் அறையினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, இப்பகுதிகளை சுத்தமாகவும், சுகாதாரத்துடன் வைத்திட தலைமையாசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் மு.பீபீஜான் (மகளிர் திட்டம்), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) த.கருணாவதி, தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory